கலாமோகனின் நிஷ்டை

nishdai

அன்புடன் ஆசிரியருக்கு

நலமா?

கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை கிண்டிலில் கொண்டு வந்திருக்கிறோம். ஒருசில நாட்கள் நூலினை இலவசமாகக் கிடைக்கச் செய்திருக்கிறோம்.

இது நூலினைப் பெறுவதற்கான சுட்டி

கலாமோகனின் நிஷ்டை

சில நண்பர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் தொகுப்பை எதற்காக கிண்டிலில் கொண்டு வருகிறாய் என்று கேட்டனர். சில நாட்களுக்கு முன் நண்பர் கணேஷ் பெரியசாமி எனக்கொரு கிண்டில் ரீடரை பரிசாக வழங்கினார். மிக விரைவாக நூல்களை வாசிக்க முடிகிறது. மேலும் இரவு எத்தனை மணிவரை வாசித்தாலும் கிண்டிலின் திரை கண்ணெரிச்சலை உண்டு பண்ணுவதில்லை. இலவசமாகக் கிடைக்கும் நூல்களையும் கிண்டிலில் கொண்டு வருவது நல்ல விஷயமாகப்படுகிறது.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட நூல்களை கிண்டிலில் கொண்டு வருவது வாசிப்பை அதிகப்படுத்தும் என்று நினைக்கிறேன்.

கலாமோகனின் எழுத்துக்களை அனோஜன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நூலில் நான் எழுதிய ஒரு சிறிய கட்டுரையும் அனோஜன் எழுதிய ஒரு குறிப்பும் கலாமோகனின் மறுபதிப்பிற்கான குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளன.

என் கட்டுரையின் இணைப்பு

காலூன்றுதலின் கசப்புகள் – கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து

நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைகுரியனும் சில எண்ணங்களும்
அடுத்த கட்டுரைஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்