கைநெசவும் தனிவழியும்

சிவகுருநாதன்
சிவகுருநாதன்

நம்பிக்கையின் ஒளி

துகள்

துகள் -கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அய்யாவுக்கு,

பெரும் நன்றியோடு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது உங்களை சந்தித்து. உண்மையிலேயே போன வருடம் இதே காலம் நானும் எம்மைபோன்ற நண்பர்களும் எடுத்துக்கொண்ட பணியில் கிடைத்த எதிர்மறையான சூழலின் காரணமாக தேங்கிக்கிடந்தோம். அன்றைய நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றத்தின் அந்த சமணதலத்தில் உங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த ஜெகநாதன் அய்யாவின் வார்த்தைகளை அறிந்தேன். அதுதான் ஒவ்வொரு சோர்விலும், தேக்கத்திலும், சலிப்பில்லாமலும் தன்முனைப்பை அகமேற்றிக் கொள்ளாமல் என்னை செயலை நோக்கி நகர்த்திகொண்டிருக்கிறது.

இத்தகையான நகர்வு வெறும் பொருளீட்டுவதற்கானதாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சத்தியத்தின் சுயத்தை கண்டடைவதற்கான தேடலாகவே இருக்கிறது என்று உங்களுடனான இந்த சந்திப்பையும் உரையாடலையும் அடிப்படையாககொண்டு நம்புகிறேன்.

சென்றவருடம் எனக்கிருந்த பயமும் குழப்பமும் இந்த வருடம் இல்லை. நிறைய தவறுகளும் செறிவின்மையும் இப்போதும் என் செயலில் இருக்கிறது. ஒவ்வொன்றாக சூழலுக்கு ஏற்றவாறு அனுகி தவறுகளை சிறுக சிறுக சரிசெய்துகொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் இயன்ற செயலை மிகுந்த நிறைவுடன் செயலை செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒவ்வொரு சிரமமான காலகட்டத்திலும் சிவராஜ் அண்ணனை தொடர்புகொள்ளும்போது அவர் சொல்லும் “தம்பி நாம் காலம் கடந்த கனவை சுமந்துகொண்டிருக்கிறோம். காந்தி எப்படி ஒரு நூற்றாண்டு தலைமுறைக்காக கனவு கண்டு வேலைசெய்ததில் நாம் அதில் பயணிக்கிறோமோ அது போல இன்னும் பிறக்காத சந்ததிக்காக நாம் கவலைப்படுவோம் அதற்கே வேலை செய்வோம். இந்த தலைமுறை புரிந்துகொள்வதற்கு சற்று காலதாமதம் ஆகும், நாம் சரியான உள்ளுணர்வு சொல்லும் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்ற வார்த்தைகளை சொல்லிவிட்டு நீங்கள் எழுதிய கட்டூரையினையோ அல்லது காந்தியை குறித்தோ , யதியின் கட்டூரைகளை குறித்தோ இணைப்புகளை அனுப்புவார். அத்தருணங்களில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் சாரம்சமாக உங்களின் எறும்பு புற்று கதை உணரவைத்தது.

நாரயண குரு, நடராஜகுரு, நித்திய சைத்தன்ய யதி என்ற குருபரம்பரையில் இருந்து கடத்தப்பட்ட ஆத்ம அறிவில் எங்களுக்கு கிடைத்த உள்ளுணர்வின் வெளிப்பாடக உங்களின் எழுத்துக்களை கரம்பிடித்தும் காந்தியத்தின் பாதையில் இயன்ற அளவிற்கு வாழ்வை நகர்த்திக்கொண்டும் இணையும் நண்பர்களை சேர்த்துக்கொண்டும் பயணப்படுகிறோம்.

ஏதோ ஒரு வகையில் இத்தருணத்தில் உங்களுடன் எங்களை இணையவைத்த காற்றில் கரைந்த அலெக்ஸ் அண்ணாவின் ஆன்மாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றும் நன்றிகடன்பட்டிருக்கிறோம்.

இரண்டுநாட்கள் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் மனைவியிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்போது மகள் புவியாழ் புன்னகைத்தப்படியே இருந்தாள். அவளுக்கு என்ன புரிந்திருக்கும் என்று தெரியவில்லை ஆனால் காந்தி, வினோபா, நாராயண குரு, யதி என்ற பெயர்களின் தாக்கங்கள் கட்டாயம் பதிந்திருக்கும் என்று நம்பிக்கையோடு நூற்பின் தொழிற்கூடத்திற்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.

எக்காலத்துக்குமான நன்றியும்… பிராத்தனையும்…
சிவகுருநாதன்

www.nurpu.in | fb: Nurpuhandlooms

சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்
சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்

அன்புள்ள சிவகுருநாதன்,

தடம்பதிந்த பாதை எளியது, ஆனால் சலிப்பூட்டுவது. எளியமனிதர்களுக்கே அது உகந்தது. தனிப்பாதையால் மட்டுமே ஊக்கம் கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவியலும். எமர்சனின் வரி. இம்முறை உங்களையெல்லாம் பார்க்கையில் மிகுந்த உற்சாகம் அடைந்தேன். நீங்கள் உங்கள் வழியில் நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் சென்றுகொண்டிருக்கிறீர்கள்.

வரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விழா நிகழ்கிறது. நீங்களும் ஸ்டாலினும் கலந்துகொண்டு ஒரு ஸ்டால் போட்டாலென்ன? அணுக்கமான, நிகரான உளநிலைகொண்ட ஏராளமான நண்பர்களைச் சந்திப்பீர்கள்

ஜெ

ஸ்டாலின் மின்னஞ்சல்:
[email protected]

முகநூல் :

பேஸ்புக் இணைப்பு

ஸ்டாலின்.பா

(9994846491).

*

சிவகுருநாதன்

====================================================

அம்பரம் முகநூல் தொடர்பு  https://www.facebook.com/ambaramvirtue
========================================================
அம்பரம் குங்குமம் கட்டுரை
உன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்
ஜே.சி.குமரப்பா நூல்கள்
சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)
குக்கூ .இயல்வாகை – கடிதம்
துகள்
துகள் -கடிதம்

முந்தைய கட்டுரைசென்னையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைஇனக்காழ்ப்பும் இலக்கியவாதிகளும்