ஒருபாலுறவு – தீர்ப்பு

homo2

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017

அன்புள்ள ஜெ

நீங்கள் சென்ற பத்தாண்டுகளாக ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக ஆக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். அதற்கான மனு ஒன்றில் கையெழுத்திட்டதையும் முன்பு சொல்லியிருக்கிறீர்கள். இன்று வந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விஜயகுமார்

***

அன்புள்ள விஜயகுமார்

இத்தகைய விஷயங்கள் படிப்படியாகவே சமூக ஏற்பு பெறும் என்பதே என் எண்ணம். ஓருபாலுறவு என்பது ஒரு குணக்கேடு அல்ல, அது ஒரு உயிரியல்நிகழ்வு, அது இயல்பானது என அறிவியல் நிறுவுவது சென்ற கால்நூற்றாண்டுக்குள்தான். அதன்பின்னரே அதை அறிவுலகம் ஏற்றது. அதன்பின் சமூக ஏற்புக்கான கருத்தியல் செயல்பாடு தொடங்கியது. அது சட்ட உருவாக்கம் வரைச் சென்றது கடந்த கால்நூற்றாண்டுக்கால கருத்தியல்செயல்பாடுகளால்தான்.

சட்டத்திலிருந்து அவ்வெண்ணம் மக்கள் மன்றம் வரைச் செல்ல இன்னும் கொஞ்சம் காலமாகும். சமூகம் அதை இயல்பாக ஏற்க இன்னும் தாமதமாகும். இது படிப்படியாகவே நிகழமுடியும். அந்த ஏற்புப் படிநிலைகளில் ஒன்றுதான் இந்த தீர்ப்பு, இதை வரவேற்கிறேன். இது மக்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கான பலபடிகளாக நீளும் சமூகச்செயல்பாட்டில் முக்கியமான முன்னடிவைப்பு

நான் மீளமீள முன்னரே சொல்லிக்கொண்டிருந்தது இந்திய மரபில் ஓருபால் ஈர்ப்பு பெருங்குற்றமாகக் கருதப்படவில்லை என்பதையே.  உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதையே சுட்டிக்காட்டுகிறது.ஆகவே இந்தியாவில் அதற்கான சமூக ஏற்பு பெரிய சிக்கல் இல்லாமல் நிகழ்ந்தேறும் என்றுதான் சொன்னேன். அதையே இப்போதும் காண்கிறேன்

ஜெ

***

ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை- அனுபவக்கட்டுரை

இலக்கியமும் பாலுணர்வும்

ஒருபாலுறவின் உலகம்

முந்தைய கட்டுரைஓரினச்சேர்க்கை
அடுத்த கட்டுரைஈர்ப்பு