ஈர்ப்பு

sures

சுரேஷ் பிரதீப்பின் அருமையான கதை இது . தளத்தில் வெளியிட்டு ஒரு விவாதத்தை துவக்கிப் பாருங்கள் .பெரும்பாலும் இதில் இருக்கும் பெண் வெறுப்பை முதல் அலகாகவும்,  கதை சொல்லி ஆண்மை அற்றவன் என்பதை ”கண்டுபிடித்து ”அதை அடுத்த அலகாக கொண்டு மட்டுமே விவாதம் நிகழும் .

மாறாக கதை சொல்லி , இந்து  இருவருமே நிற்கும் உயரமும் ,அந்த உயரத்தை கொண்டு ,ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வதுமே இந்த கதையின் ஆழம் .  கதை சொல்லி நீ தேவை என அவள் வசம் சொன்ன கணமே சரியத் துவங்கி விடுகிறான் .  அவள் கண்களின் இவ்வளவுதானா நீ என்பது வந்து விடுகிறது . அவன் அவள் தொடையில் முத்தமிடுவதன் வழியே இவ்வளவுதான் நீ என அறிவிக்கிறான் . அவள் அவனை உதைத்து தள்ளி வெளியேறி விடுகிறாள் .
ஆண் பெண் விளையாட்டை அதன் மர்மத்தை பேசிய கதைகளில் முக்கியமான கதை இது .
கடலூர் சீனு
ஈர்ப்பு -சுரேஷ் பிரதீப்
முந்தைய கட்டுரைஒருபாலுறவு – தீர்ப்பு
அடுத்த கட்டுரைகம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ