பேட்டிகள், உரையாடல்கள்

jeyamohan41a

அன்புள்ள ஜெ

சமீபத்தில் கேரளத்தில் உங்கள் பேட்டிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உங்கள் வாசகனாக எனக்கு அவை மிகவும் மனநிறைவை அளிக்கின்றன. மலையாளத்தில் பொதுவாக எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இடம் மிக முக்கியமானது. ஆயினும் உங்களுக்கு அளிக்கப்படும் இடம் எம்.டி போன்ற மேஜர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுவது.

எல்லா பேட்டிகளும் மிக விரிவான தயாரிப்புகளுடன் மிக நீளமாக முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முக்கியமாகவும் வெளியிடுகிறார்கள். போட்டோக்களும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வாழ்க்கைச்சூழலில் எடுக்கப்பட்டவையாக உள்ளன.

இந்த அளவுக்கு ஓர் இடம் உங்களுக்குத் தமிழில் அளிக்கப்பட்டதே இல்லை. உங்களை இங்கே பத்தோடு பதினொன்றாகவே நினைக்கிறார்கள். எல்லாரையும் போல வழக்கமான கேள்விகளைக்கேட்டு வெளியிடுகிறார்கள். பெரும்பாலான பிரபல இதழ்கள் உங்களை எதிரியாகவும் நினைக்கின்றன என நினைக்கிறேன்.

ஓணம்நாள் போன்ற பிரைம் டைமிலேயே மாத்ருபூமி டிவியில் ஜயமோகனம்- நாஞ்சில்நாடு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. உங்கள் எழுத்தின் சூழலாக உள்ள நிலத்தை அடையாளம் காட்டும் அற்புதமான டாக்குமெண்டரி. எழுத்தாளராக நீங்கள் கேரளாப்பக்கம் நகர்ந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

ஆர்.ராஜகோபால்

அன்புள்ள ஜெயமோகன்
மூன்று மாதங்களுக்குள் மலையாளத்தில் மாத்யமம், மாத்ருபூமி நாளிதழ் இணைப்பு, பாஷாபோஷிணி ஆகிய பிரபல இதழ்களில் உங்கள் பேட்டிகளைக் காணமுடிந்தது. எல்லாமே விரிவான பேட்டிகள். நல்ல படங்கள். உங்கள் வீட்டுச்சூழலைக்கூட வாசகர்களுக்குக் காட்டுவதாக இருந்தது அது.

மாத்ருபூமி, ஏசியானெட் தொலைக்காட்சிகளில் உங்கள் பேட்டிகள். அவற்றில் மாத்ருபூமி ஜயமோகனம்- நாஞ்சில்நாடு நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தூரதர்சன் திருவனந்தபுரம் வெளியிட்ட நிகழ்ச்சிதான் மிகவும் பிடித்திருந்தது. கல்பற்றா நாராயணனும் நீங்களும் அமர்ந்து காமிரா சென்ஸே இல்லாமல் உரையாடிக்கொண்டிருந்ததும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் அமைந்த சூழலும் மிகச்சிறப்பாக இருந்தது

ராஜேந்திரன்

மாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்

கல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி

மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்

மாத்ருபூமி பேட்டி

முந்தைய கட்டுரைஷேக்ஸ்பியர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆன்மிக வாசிப்பில் நுழைதல்