கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

விஷ்ணுபுரம் விருது விழா கட்டுரை பார்த்தபோது மகிழ்வாக இருந்தது,நல்ல படைப்பாளிகளை அடையாளம் காட்டும் உங்கள் இலக்கிய வட்டத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.திரு.ஆ. மாதவன் முக்கியமான தமிழ்ச்சிறுகதை படைப்பாளி,அவரை கவுரவப்படுத்திய உங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாழ்க,வளர்க.
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி
பாம்பாட்டிச்சித்தன்.(குவைத்)

அன்புள்ள பாம்பாட்ட்சித்தன்

நன்றி.

தொடர்ந்து செயல்படவேண்டும் என்ற எண்ணம் இப்போது வாசகர்களின் ஊக்கத்தால் உருவாகி உள்ளது

ஜெ

————————–

Hi JeyaMohan,

I came to know that you are going to reduce writing columns via your website and I am terribly disappointed by your announcement. I have been constantly reading your columns for the past two months and your writing made me a J MO fanatic immediately. I came to know about you from my peer Vivek with whom I used to have loads of discussion on our society,our customs and many… and on oneday he came to tell about the book he picked up to read “Panpaduthal” and then we immediately started picking up your views on society by your columns that you post on your websites.

To be frank I still didn’t read any book of yours and i’ll start reading Panpaduthal from this weekend which vivek promised to give(has ordered Vishnupuram already).So,this is a humble request from a fan who never read your book but who follows you up with your writings on columns to ask you never stop writing.

Hope i made my point.

P.S: Regarding your article on Ma Po C : I come from Tiruttani so I feel really good that I finally came to know what really happened during the state Partitioning and the whole details of how my town retained to the state which was ruled by the great Cholas.

With Love,

Arun Kumar Nehru

அன்புள்ள அருண்

இணையத்தில் எழுதுவதை நிறுத்த போவதில்லை. கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்

நீங்கள் குறைந்தது ஒருவருடம் வாசிக்கவேண்டிய விஷயங்கள் ஏற்கனவே இணையத்தில் உள்ளன))

ஜெ

___________________

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவன் நான். ஆனாலும் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. கவிதையை மொழிபெயர்ப்புச் செய்வது குறித்து
எழுதியிருந்தீர்கள். எனக்கு உலகக்கவிதைகளை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் மட்டுமே வாசிக்கப் பிடிக்கிறது. பிரம்மராஜன் தொகுப்பும் நல்ல வாசிப்பைத்
தருகிறது. மற்றவர்களின் மொழிபெயர்ப்பில் வாசிக்கப் பிடிப்பதில்லை. இது ஏன் என்று இதுவரை உணர முடியாமலிருந்தேன். உங்கள் கட்டுரை உதவியாக
இருந்தது.

நன்றி
சிவன்.

சிவன்,

நன்றி

மொழியாக்கம் எப்போதும் தவறிப்போகும் ஒன்று. ஆனாலும் ஒருவன் அதைசெய்தாகவேண்டும். மொழியாக்கம் என்பது நம் மொழியைச்செம்மைசெய்ய மிக அவசியமானது

ஜெ

__________________________________

அன்புள்ள ஜெயமோகன்

சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் நிகழ்வுகளை அதன் தேவை மற்றும் நோக்கத்தின் பின்னணிகளுடன்,
விரிவாக எழுதியுள்ளிர்கள் மிக்க நன்றி, அக்கால அரசியல் பற்றி பொதுவாக திராவிட அரசியல் கட்சிகள் பரப்பும்
கருத்துகள் மட்டுமே சரி என்று எண்ணும் எனக்கு தெளிவு பிறந்தது மீண்டும் நன்றி………

கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

இவற்றை நான் இறுதி உண்மைகளாக வைக்கவில்லை. அன்றைய சூழலை பரப்புரைகளை தவிர்த்து ஆராய முயல்கிறேன். முறையான ஆராய்ச்சியாளர்கள் என அதிகம் பேர் நம்மிடம் இல்லை. அப்படிப்பட்ட ஆய்வுகள் வரும்போது இச்சித்திரங்கள் இன்னும் துல்லியப்படும்

ஜெ

________________________

அன்பு ஜெ,

’ஓர் அறிவிப்பு’ படித்தேன். உங்கள் இணையதளக் கட்டுரைகள் அளவிற்கு
அசோகவனம் நாவலையும் எதிர்பார்த்தே இருக்கின்றோம். எனவே இணைய நேரத்தைக்
குறைத்து அசோக வனத்திற்கு செலவிடுவதில் மகிழ்ச்சியே.

மாவோயிசம் கட்டுரைகளை படித்துவிட்டு நிறைய யோசிக்கிறேன். இவ்வளவு
நாட்களாக படித்து மனதில் ஏற்றி வைத்தவைகளை அடியோடு புரட்டிப் போடுகிறது
உங்கள் அணுகுமுறை. ஜீரணிக்க கொஞ்சம் நாளாகும்போல் உள்ளது.

நன்றி.

அன்புடன்
செங்கோவி
http://sengovi.blogspot.com/

அன்புள்ள செங்கோவி

நன்றி

நான் ஒரு கோணத்தை திறந்திருக்கிறேன். அதனூடாக நீங்கள் பார்க்கலாம். சிந்திக்கலாம்

ஜெ

======================

அன்புள்ள ஜெயமோகன்,

அனல் காற்று நாவல், வழக்கம் போலவே அசைத்து விட்டது. விரிவாக எப்படி சொல்வது என தெரியவில்லை. எவ்வளவு முயன்றாலும் தீர்வு காண முடியாத , ஆரம்பம் முடிவு இல்லாத ஒரு கருதுகோள் , சரடு போல் வாழ்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த அடங்கா காமத்தை அறிய முயற்சிக்கும் இன்னொரு முயற்சி இது. வெற்றி தோல்வி என்பதை விட மன மற்றும் அகங்கார திருப்தியே இந்த முயற்சியே முக்கியமானது என தோன்றுகிறது.

மிக அற்புதமான படைப்பு. மிக்க நன்றி.

shankaran e r

அன்புள்ள சங்கரன்

ஈஸோவாஸ்யம் இதம் சர்வம். ஆனால் பிரம்மம் இன்னும் கொஞ்சம் தெளிவாக தன்னை காட்டுவது காமத்தில்தான்))

ஜெ

மா

முந்தைய கட்டுரைநாவல்,முன்னுரை
அடுத்த கட்டுரைபனிமனிதன்