இரா முருகன்
மயில்மார்க் குடைகள்
அன்பு ஜெயமோகன்
மயில் மார்க் குடைகள் என்ற என் கதை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை பத்து நிமிடம் முன்னால் தான் படித்தேன். ஏப்ரலில் நீங்கள் எழுதியதை எப்படி ஆகஸ்ட் முதல் வாரம் வரை படிக்க விட்டுப் போனதென்று தெரியவில்லை. பத்ரி தளம் வழியாக உங்கள் தளத்து க்கு வந்து படிப்பது வழக்கம். எப்படியோ தவறியிருக்கிறது.
மிக்க நன்றி. உங்களின் பாராட்டு என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. நாவல் எழுதுவதோடு, சிறுகதையிலும் இன்னும் மும்முரமாக இயங்கலாம் என்று உற்சாகம் தருகிறது.
மிக்க நன்றி
பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு மகிழ்ச்சியான தகவல் –
என்.எஸ்.மாதவனின் ‘லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவல் என் மொழிபெயர்ப்பில் ‘பீரங்கிப் பாடல்கள்’ என்று இரண்டு நாட்கள் முன் வெளியாகியிருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. அவர்களை உங்களுக்கு அனுப்பச் சொல்லலாமா?
அன்புடன்
இரா முருகன்
அன்புள்ள முருகன்
நலம்தானே?
இப்போது ஐரோப்பா பயணத்தில் இருக்கிறேன். ஜெர்மனியில்
மாதவனின் நாவலை நான் வாசித்திருக்கிறேன். கலாச்சார உட்குறிப்புகளைக்கொண்டு விளையாடும் படைப்பு அது. அதை மொழியாக்கம் செய்வது மிகப்பெரிய சவால்
அதேசமயம் உங்களால் சாத்தியம். நீங்கள் எழுதும் விளையாட்டு கலந்த புனைகதைp பாணியை கொண்டதுதான் அதுவும். உங்களுக்குக் கேரளப்பண்பாட்டுடன் அணுக்கமான தொடர்பும் உள்ளது
அனுப்புங்கள்
ஜெ
பஷீர்-இரா.முருகன்– கடிதம்
ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்