மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்

aruna

 

 

மாத்ருபூமி பேட்டி

அன்புள்ள ஜெ அவர்களுக்கு

 

July 29 மாத்ருபூமி இதழில் வெளியான உங்களின் விரிவான பேட்டியை தமிழில் வாசிக்க காத்திருக்கிறேன் ஆவணம் செய்யவும்

 

பிரியமுடன்
சக்தி
(குவைத்)

 

 

அன்புள்ள சக்தி

 

 

அந்தப்பேட்டி வழக்கமானதுதான். அதில் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய புதிய செய்திகள் இருக்காதென்றே நினைக்கிறேன். மேலும் இப்போது நேரமில்லை. வெண்முரசு ‘செந்நாவேங்கை’ முடியப்போகும் தருணம். காற்றில் பறக்கின்றன கணங்கள்

 

ஜெ

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.

 

தங்களின் ‘நேர்முகம்’ மாத்ருபூமி மலையாள இதழில் வந்திருப்பதைப் பற்றிய செய்தியை படித்தேன்.அதற்கான சுட்டியின் தலைப்பு ‘என்மொழியே’ என்று தமிழில் இருந்ததால் ஆர்வத்துடன் சொடுக்கினேன் ஆனால் வந்ததோ மலையாள வடிவம்!.பின் மனம் தளராமல் அதன் ஒரு பகுதியை காப்பி செய்து கூகுள் ஆண்டவரின் மொழியாக்க உதவியால் ஓரளவு தமிழில் படிக்கலாம் என நினைத்து அதற்கான கட்டத்துக்குள் இட்டால் அதன் முடிவு இப்படி…….

 

“தமிழ்நாட்டின் பெரிய எழுத்தாளர் வாழ்ந்து வருகிறார். அதே சமயத்தில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஸ்கிரிப்ட் மற்றும் புனைவு. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு ஒரு அத்தியாயம். தயவு செய்து …

 

மேலும் வாசிக்க: https://www.mathrubhumi.com/print-edition/weekend/–1.3012868
மார்ச் 1991 மாலையில் மதுரை வேளாண்மைக் கல்லூரியின் வழிகளிலும், தெய்வத்தின் தேவதாசி தேவதாசி வழியாகவும் நடந்து சென்றனர். தர்மபுரிக்கு திரும்பிய ஜெயமா

 

மேலும் வாசிக்க: https://www.mathrubhumi.com/print-edition/weekend/–1.3012868

 

எங்களுடைய தேனிலவு எங்கே என்று தெரியாது! ஆட்டூர் மற்றும் சுந்தரராஸ்வாமி ஆகியவற்றின் முனைகளில். ஜெயாவின் இலக்கிய வகைகள் பெரியவை …

 

மேலும் வாசிக்க: https://www.mathrubhumi.com/print-edition/weekend/–1”

 

இந்த “முழிபெயர்ப்பின்” மூலம் நான் புரிந்து கொண்டது ஒவ்வொரு நாளின் சூரிய உதயத்திற்கும் வெண்முரசின் அத்தியாயம் ஓன்று வெளிவருவதும் மற்றும் தங்களின் தேனிலவு எங்கே என்று தங்களுக்கு தெரியாது என்பதும் தான்.மொத்தத்தில் இந்த நேர்முகம் மிகவும் சுவாரசியமாக இருக்கும்போல் தெரிகிறது.உங்களைப்போல் தமிழும்,மலையாளமும் நன்கு தெரிந்த ஒருவர் இதை மொழிபெயர்த்து வெளியிட்டால் நல்லது.

 

அன்புடன்,

அ .சேஷகிரி

 

 

அன்புள்ள சேஷகிரி

நண்பர் ஒருவர் ஏற்றுமதி வணிகம் செய்துகொண்டிருந்தார். ஆங்கில வணிகக் கடிதங்களை கூகிள் மூலம் மொழிமாற்றம் செய்வதாகச் சொன்னார். இந்த மொழியாக்கங்களைப் பார்க்கையில் கவலையாக இருக்கிறது, என்ன ஆனாரோ என்று

 

ஆனால் சிற்றிதழ்சார் மொழியாக்கங்களைவிட நன்றாகத்தானே இருக்கிறது என அருண்மொழி கருதுகிறாள்

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

மாத்ருபூமி பேட்டியை வாசிக்கமுடியவில்லை. நீங்கள் இருவரும் நின்றிருக்கும் படம் அழகாக உள்ளது. இயற்கையான சிரிப்பு. அருண்மொழி அழகாக இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்

 

சித்ரா

 

அன்புள்ள சித்ரா

 

மாத்ருபூமி பேட்டி இருவகை எதிர்வினைகளை பெற்றுள்ளது. காசர்கோட்டில் என் பழைய வாடாபோடா நண்பர்கள் “டேய் மயிரே, உன்னை மாதிரி மொசக்கோடனை அழகான பெண் எப்படியடா லவ் பண்ணினாள். சரி, தெரியாமல் லவ் பண்ணிவிட்டாள். எப்படி இருபத்தைந்து ஆண்டு கூட இருந்தாள்?” என்றனர்

 

சொந்தக்காரர் வட்டாரத்தில் அருண்மொழி ஒரு ஸ்டார். என் தங்கை உட்பட பலருக்கு“நல்ல போட்டோ. ஆனால் பக்கத்திலே இவனை இவளவு பெரிதாகப் போட்டிருக்கவேண்டாம்” என்று அபிப்பிராயம்

 

ஜெ

முந்தைய கட்டுரைஊர்வன்களின் உலகம்!
அடுத்த கட்டுரைதணியாத தாகம்