அண்ணன்களின் பாடகன் -கடிதம்

mal

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “ – ஒரு கடிதம்

அருமையான பதிவு . மலேசியா வாசுதேவன் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளார் .தமிழில் சரியான உச்சரிப்பு ,குரலில் ஏற்ற இறக்கங்கள் யாவும் மலேசியா வாசுதேவன் பாடல்களில் காணலாம் .அந்தவகையில் இந்த பதிவில் அவர் பாடியதில் மிக அரிதாக கேட்கக்கூடிய பாடல்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் . இசை ஒன்றே மனிதனை கவலை ,மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் அமுது . அது மட்டும் அல்ல இது போன்று கடலுக்கடியில் உள்ள அறிய நவரத்தின கற்கள் என பல (கேட்பதற்கு )அரிய பாடல்களை மலேசியா வாசுதேவன் 1980 களில் பாடியுள்ளார் .அதில் ஒரு படம் தான் நியாயம் என்றொரு படம் .1984 ல் இளையராஜா இசையில் வெளிவந்தது .அதில் மலேசியா வாசுதேவன் பாடிய முத்தான மூன்று பாடல்கள் உள்ளன .

1 கருது காத்தாடுது குருவி கூத்தாடுது

2.வெட்கப்பட வேண்டாம் ஏ வெட்டுக்கிளியே

3 பாலயத்து சூலி பழையனூர் நீலி

http://mio.to/album/Niyaayam+%281984%௨௯
இந்த படத்தின் பாடல்களை/ கடந்த முப்பது வருடங்களாக வானொலியில் ஒலிபரப்பி நான் கேட்டதில்லை .அது மட்டும் அல்ல எந்த ஒரு டிவி சேனலிலும் இந்த படம் நான் பார்த்ததில்லை .காப்பி ரைட் பிரச்சனையாய் இருக்கலாம் என நினைக்கிறேன் . .மேலும் இந்த படத்தில் கே.ஜே ஜேசுதாஸ் -s ஜானகி பாடிய ஒரு Mega Hit ஜோடி பாடலும் உண்டு .

கங்கை நதி மீனோ ! மங்கை விழி தானோ – என்ற பாடல் தான் அது .

http://mio.to/album/Niyaayam+%281984%29

மலேசியா வாசுதேவன் பாடிய மெகா ஹிட் பாடல்களின் தொகுப்பை இந்த blog சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் ஒரு இசை ரசிகராக .ஒரு மலேசியா வாசுதேவன் பாடல்களில் பிரியம் கொண்டவராக .

http://www.radiospathy.com/search/label/மலேசியா வாசுதேவன்

தி .செந்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் என்னும் அளவுகோல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅச்சிதழ்கள், தடம்