கம்போடியாவில் இருந்து…

IMG_5367comp3

சென்ற 21 ஆம் தேதி சிங்கப்பூர் வழியாக கம்போடியாவின் சியாம் ரீப் நகருக்குச் சென்று இறங்கினோம். அருகே சூழ்ந்திருக்கும் காட்டுக்குள் உள்ளது உலகப்புகழ்பெற்ற ஆங்கோர்வாட், ஆங்கோர்தாம், பாயான் பேராலயங்கள். ஆறு நாட்கள் அங்கே நண்பர்களுடன் தங்கி ஆலயங்களைச் சுற்றிப்பார்த்தோம். அதில் ஒருநாள் உலகின் மாபெரும் ஏரிகளில் ஒன்றான டோன்லே சாப் [  Tonlé Sap ] ஏரியையும் அதைச்சூழ்ந்திருக்கும் மிதக்கும் கிராமங்களையும் நீர்க்காடுகளையும் பார்த்தோம்

comp 4

இன்று [27-7-2018] கிளம்பி திருவனந்தபுரம் வழியாக காலையில் நாகர்கோயில் வந்தடைந்தோம். நீண்ட பயணம். களைப்புநிறைக்கும் நடை. குடும்பத்துடன் வேறு சென்றிருந்தேன். ஆகையால் பயணக்குறிப்புகளை எழுதமுடியவில்லை. இனி நினைவிலிருந்து எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்

comp

இதுவரைச் சென்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது கம்போடியா. கீழைக்கடலுக்கு அப்பால்   இந்தியப்பண்பாட்டின் மாபெரும் நீட்சி என அதைச் சொல்லமுடியும். இன்றும் பௌத்தமே அங்குள்ள முதன்மை மதம். பேராலயங்கள், பௌத்தவிகாரைகள், சம்ஸ்கிருதப்பெயர்களின் மருவுக்கள் என அணுக்கமும் முற்றிலும் வேறு நிலப்பரப்பு, மஞ்சள் முகத்திரள் என அயன்மையும் ஒரேதருணத்தில் தோன்றச்செய்தது அந்நாடு

comp2

நண்பர்கள் லண்டன் முத்துக்கிருஷ்ணன், சிட்னி கார்த்திக், டோக்கியோ செந்தில், திருச்சி விஜயகிருஷ்ணன், பாண்டிச்சேரி சிவராமன், ஈரோடு கிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தார்கள். சிங்கப்பூரில் இருந்து சுபஸ்ரீ வந்திருந்தார். பயண ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் சிங்கை நண்பர் சரவணன் விவேகானந்தன்

அனைவரையும் மீண்டும் மீண்டும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறேன் என்றாலும் இத்தருணத்தில் பிரிவின் துயர்

முந்தைய கட்டுரைஆங்கிலமும் இந்தியாவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59