அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018

download

தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அழிசி அந்த நூல்களை கிண்டிலில் பதிவேற்றியது. ஏராளமான வாசகர்களால் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையினை வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்றினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம்.

பரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack – கிண்டில், அதற்கான உறை, 2 ஆண்டு காப்பீடு மற்றும் 50% கழிவில் அதிகபட்சம் ₹2000 வரை மின் நூல்களை வாங்கும் வாய்ப்பு. மொத்த மதிப்பு : ₹12000

மேலும் முதல் பத்து இடங்களைப் பெறும் வாசகர்களின் கட்டுரைகள் பதாகை மின்னிதழில் அவர்களின் விருப்பத்தின் பேரில் வெளியிடப்படும்.

போட்டிக்கான நிபந்தனைகள்

  1. இரண்டாயிரம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகான வருடங்களில் வெளிவந்த நாவல்கள் (Print book / eBook) எதைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்.
  2. குறைந்தபட்சம் 600 வார்த்தைகள் கொண்டதாக கட்டுரை இருக்க வேண்டும். அதிகபட்சம் வரம்பு கிடையாது.
  3. ஒரு போட்டியாளர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும்.ஏற்கெனவே பிரசுரமாகாததாகவும் இருக்க வேண்டும்.
  4. Unicode எழுத்துருவில் word document ஆக அனுப்பவும். டாக்குமெண்ட்டுக்குள் கட்டுரையாளரின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது.
  5. கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி[email protected]சப்ஜெக்டில் அழிசி கட்டுரைப் போட்டி என்று குறிப்பிடவும். பெயர் முகவரி அலைபேசி எண் போன்ற விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடவும். அலைபேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
  6. கட்டுரையாளர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் கிண்டில் டிவைஸ் இந்திய முகவரிக்கே அனுப்பப்படும் என்பதால் கட்டுரையாளர் தவறாமல் இந்திய முகவரி ஒன்றை குறிப்பிட வேண்டும்.
  7. கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்15.08.18
முந்தைய கட்டுரைசிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்