நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எண்ணிக்கை பல மடங்கு. கொள்ளளவும் மிக அதிகம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரைச் செலவாகிறது. அதை பல சிறுபகுதிகளாகப் பிரித்து பணம் கொடுக்கிறோம். அவ்வாறு பணம் கட்ட விட்டுவிட்டதனால் இணையச்சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. மீண்டும் கட்டிவிட்டோம். மூன்றுமாதங்களுக்குப் பிரச்சினை இல்லை