கம்போடியா பயணம்

a

இன்று [20-7-2018] மாலை திருவனந்தபுரத்திலிருந்து கம்போடியாவுக்கு ஒரு பயணம் கிளம்புகிறோம். இம்முறை என்னுடன் முழுக் குடும்பமும் உண்டு. அருண்மொழி, அஜிதன், சைதன்யா. இந்தியாவிலிருந்து நண்பர்கள் கிருஷ்ணன், சிவராமன், விஜயகிருஷ்ணன். சிங்கப்பூரிலிருந்து சரவணன் விவேகானந்தன், சுபஸ்ரீ. மற்றும்  ‘லண்டன். முத்து, ‘”சிட்னி”  கார்த்திக், “டோக்கியோ”  செந்தில்

அஜிக்கும் சைதன்யாவுக்கும் இது முதல்வெளிநாட்டுப்பயணம். அதன் உரிய பதற்றங்கள்.ஐயங்கள் குழப்படிகள். வெண்முரசு ஒருவழியாக எழுதி 30 -7-2018 வரை சேமித்தாக்விட்டது. பதிவுகளும் 31 வரை தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆகவே எட்டுநாள் விடுதலை.

b

ஆங்கோர்வாட்டுக்கு செல்லவேண்டும் என திட்டமிடத் தொடங்கி பல ஆண்டுகளாகின்றன. அதற்குப்பின் திட்டமிட்ட பரம்பனான் ஆலயவளாகத்துக்குச் சென்றுவிட்டோம். ஒருமுறை விமானப்பதிவு வரை சென்றபோது கம்போடியாவும் தாய்லாந்தும் பூசலிடத் தொடங்கின. பயணத்தை ஒத்திப்போட்டோம். இப்போது திடீரென சென்றே தீர்வது என முடிவெடுத்து கிளம்பியிருக்கிறோம்

கம்பொடியாவில் நல்ல மழை. நனைந்தபடித்தான் ஆலயவளாகத்தைப் பார்க்கவேண்டும் என்றனர். மழை கல்லுக்கு மிகவும் பிடித்தமானது. கல் அழகுகொள்வது நனையும்போதுதான்

IMG_20180720_210720

IMG_20180720_211007

முந்தைய கட்டுரைஆசிரியர்களின் வாழ்த்து
அடுத்த கட்டுரைஇணையதளச் சிக்கல்