படிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி

unnamed

மதிப்புகுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.  நலம்.  தாங்கள் குடும்பத்தினர்களும்  நலம்  என்றறிய  ஆவல்.

பாதி வருடம்  கடந்துவிட்டது  ஊட்டி முகாம் வரமுடிந்தது  போல விஷ்ணுபுரம் விழாவிலும்  கலந்துகொள்ள  வாய்ப்பு  அமையவேண்டும்.

தேவதேவன்  அவர்கள் கவிதை வரிகளை  இரசித்த இரசனையாளரின்  கை வண்ணத்தில் அருமையான  தோற்றத்தோடு   100 படங்களாக  கிடைத்ததும் தினம் தினம்  அவரது வரிகள் தான்  என் கணினியை  அலங்கரிக்கின்றது.  தினமும் கவிதை வரிகளைப் படிப்பதென்பது  தனிச் சுவைதான்!

ஊட்டியில்,  பேரன்புடன் இருகைகளையும்  விரித்து வந்து விடு  என்று அழைத்து  ஆரதழுவுவது  போல  இருந்த   ஓசாமா கவிதை  பற்றியஅரங்கு முடிந்ததும்,  தேவதேவன்  அவர்களுடன்  தேநீர் விவாத்தின்  போது  ஓசாமா  கவிதை பற்றி ஏதோ  கடைசியாக  பேசப்பட்டது என்ன என்று  கேட்டார்,  அதற்கு நான் , ஒரு  நண்பரின்   கருத்து  ஒரு வேளை  ஓசாமா  கவிதை  ஆங்கிலத்தில்  ஓசாமாவிற்குகிடைத்திருந்தால்  அவர்  வந்திருக்கக்கூடும் என்ற  பதிவு என்றேன். சில நோடிகள்  ஆழ்ந்த அமைதிக்கு பின்  வந்திருக்களாம் தான் என்றார் .  அதே போல இயற்கையின்  அழிவுகளால் இன்னும் 600  ஆண்டுகளில்  பூமிக்கு  ஆபத்து  என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஆக்கின்ஸ்கூறியிருந்தார், அதற்கும் இயற்கை அழிவுகளில்  இருந்து   மீட்கலாம்  என்று   ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்  வரவிருக்கிறது என்றார் அப்ப பூமிய  ஆபத்திலிருந்து  காப்பாத்திடலாம்   இல்ல.. அவர்  முடித்த கனத்தில்  தோன்றியது  ஓசாமா  கவிதை  10  வருடத்தில்   ஒரு  புது நம்பிக்கையை  அளித்தது  ‘ஒரு வேளை  ஓசாமா  படித்திருந்தால் மனம் மாறி வந்திருக்கலாம் தான்  என்று ’இந்த  கவிதைக்கு காலம் நிறையவே  இருக்கிறது  கண்டிப்பாக  அனைவரிடமும்  ஒரு மாற்றத்ததை  ஏற்படுத்தலாம் தான்.

கவிதைகள்  பொறுத்தவரை  பாலபருவத்தில் இருக்கிறேன்.  கவிதைகள் நோக்கி  நகர ஊட்டி  2017  கவிதைகள்   அரங்கு  ஒரு காரணம். கவிதை, குறுகிய  சொட்றோடர் வழிய நீண்ட  பயணங்கள்  அமையும்  தோறும்  அதலிருக்கும்  படிமத்தை  அடைந்ததாக  உணர்ந்தகணத்தில் கற்பனையின்  அதிசயங்களை  உணர்வுகளை அனுபவிக்கதான் வேண்டும்! காலத்தை காலால்  உதைப்பேன் என்கிறது கவிதை.

திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் சங்க இலக்கிய பாடல் ஒன்றை அவர் அனுகிய முறை அதன் வழி  எடுத்துரைக்கும்  விளக்கம்பற்றி ஒரு உரை,  திருச்சியில் 2009  ஆண்டு நடந்த  ஆங்கில  சுற்றறிக்கையின்  அடிப்படையில்  பேசிய உரை  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்  சார்பில் தமிழில்  பிரசுரிக்கப்பட்டது   ‘சிந்துவெளிப் பண்பாடும்  சங்க இலக்கியமும்’  புத்தகம்.

புறநானூறு  பாடல் 201, கபிலர்  இருங்கோவேள்  பாரியை வெற்றி கொண்டது  அவரிடம் ஒரு  கோரிக்கை  வைப்பதாக  வருகிறது  இந்தபாடல்  அதில்

நெடுமாப் பாரி மகளிர்; யானே

தந்தை தோழன்: இவர்என் மகளிர்;

அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;

நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் ,

செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,

உவரா ஈகைத், துவரை ஆண்டு,

நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே! ..’

புறநானூறு பாடல் 202, இருங்கோவேள் கோரிக்கையை ஏற்காத்தால்  கபிலர் உள்ளம் நொந்து  பாடுவதாக  வருகிறது

வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,

இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,

கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய

நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;

நுந்தை தாயம் நிறைவுற எய்திய

ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!

முதல் பாடலில்  அகத்திய  முனிவரின் கும்ப  பிறப்பு வழி தோன்றிய  ஈகை தரும் பெருமை உடைய  துவாரகையை  ஆண்ட அரசவழி, 49 வழிமுறை  கடந்த  வந்திருக்கும்  வேளாள வேளே  இருங்கோவேளே ..  என்று  பொருள்  தருகிறார்.  இது  இப்போது  இலக்கியங்களில் இருக்கும்  விளக்கத்திலிருந்து  வேறுபட்டது.  அதே போல்   இருங்கோவேள்    மறுத்தபிறகு  அவரை எச்சரிக்கும் விதமாக  ‘இருபால்பெயரிய  உருகெழு  மூதூர்’  இரு பிரிவுகளை  உடைய முது பெரும் பழைய  நகர்ங்கள் அழிந்ததை  நினைவுபடுத்துகிறார்   அதுவும் புலிகடிமால்  என்று. இந்த புலிகடிமால்  சிந்துவெளி குறிப்புகளில்  ஒரு குறிப்பாக  இருக்கும் ஒரு மனிதன் இரு கரங்களிலும் இருபுலியை கொள்வது போன்ற குறிப்புடன் இணைத்து பொருள் தருகிறார்.  அதே போல் இரு நகரம் என்பது சிந்துவெளி  நகரங்களின்இயல்பு,  கோட்டை  அதன்  அதிகாரம்  அமைப்பு ஒரு புரம் ஊர்  ஒரு புரம். அத்தோடு, அகத்தியர்  மாமுனிவர்  18 வேளாள  குடிகளை  அழைத்துக்கொண்டு  விந்திய மலையை  கடந்து தெற்கே வந்தார்  என்ற  தொன்மக் கதையும்  நினைவுபடுத்துகிறார்.

இங்கு ஒரு  நெகிழ்ச்சி ஏற்பட்டது  காரணம் வடக்கே  சிந்துவெளிக்கும் தெற்குற்கும்  தொடர்பு  வழித்தடங்களை    அறிவது போல ஒருசூழல்.  முன்பொரு கடிதத்தில்  முன்னுகங்கள்  கறாரான  ஆய்வுகள் மூலம் நீராகரிக்கப்படலாம்   என்னும் அறிவுரை யைநினைத்துக்கொண்டேன்  இருப்பினும்  இந்த ஊகங்கள்  க விதையின் அடிப்படையில்  என்னும் போது அதற்கான  வாய்ப்புகளையும் கவிதை  அளிக்கிறது,  கவிதை! அதனுடன்  தெற்கிற்கான  பழங்குடித்தன்மையிலிருந்து  பண்படுதல்  என்று  தொடங்கி  நிலம் நிலம்சார்ந்து  மாறுதல்,  எனது மேலான கற்பனை. அது,  தெற்கே செம்பின்  கண்டீயூர்  காவேரி  படுகை, கொடுமணல் மற்றும்  சூலூர்நொய்யல் படுகை,  ஆதிசநல்லூர்  தாமிரவருணி படுகை  மற்றும்கீழடிப் படுகை என்று அனைத்து ஆதாரங்களும் ஆற்றுபடுகைகளுடன் கூடியது இது சிந்துவெளி  சரஸ்வதி  படுகை தொடர்புபடுத்த   செய்கிறது. இப்போது, அனேக தொன்ம கதைகள்,  புராணங்கள்,  ஆகழ்வாய்வு  கண்டேடுப்புகள் என்று  அனைத்தையும் ஒன்று சேர்த்தால்,  ஒரு கற்பனையாக, சரஸ்வதி  படுகையில் அதிகமாக மண்  சுரண்டப்பட்டது (தொடர் விவசாயம் போல),  காடு வேட்டி மண்  பண்படுத்தல்   என்ற  முறையால்  காடுகளை இழந்தது,  ஆதலால் அதிக வெள்ள பேருக்குகளிலிருந்து  தப்பமுடியால்  போனது போதா குறைக்கு  சரஸ்வதி தடமாறியது  என்று அன்றையசிந்தவெளி  மக்கள்  இடம்  பெயர்  நேர்ந்தது. அதை  நினைவுபடுத்தும் தொன்ம  கதையாக அகத்தியர் குடிபெயர்வு  கதை.  அத்தோடு,  மண் பண்படுத்துதலில்  அதிக அனுபவம் கொண்ட  குடிகள் தெற்கே வந்ததுதான்  தெற்கில்  அதிக  வேளான்மை   பெறுக காரணம்என்றால்  இயல்பாகவே அவர்களிடத்தே  இடம் உரிமை  சென்றது.

ஒரு படம் இணைத்துள்ளேன். படத்தில்  மூன்று சிந்துவெளி குறியீடுகளை  வரைந்துள்ளேன்  (ஏறக்குறை வந்துள்ளது  என்றதான்சொல்லவேண்டும் ;))  அதில் முதலாவது குறியீடு பார்த்தும்  உடனே தோன்றியது  எங்கள் ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு  வரை வீட்டில்விஷசம் என்றால்  தண்ணீர்  தேவை  அதிகமாகிடும் கிணறு பற்றாது ஆகையால் நீர் சுமப்பவர்கள்  இருப்பார்கள்,  ஒரு மூங்கிலை பாதியாக  பிளந்து தட்டை கம்பாக  தோள்பட்டையில்  அமர்வதற்கு இலகுவாக அமைத்து  இரு புறங்களிலும் முடைந்த சணல்கயிற்றால்,  குறுக்காக ஒரு கட்டை அமைத்துக்கொண்டு  எண்ணை டின்களை  கட்டி இரு கைகளாலும் இரு டின்களையும்  ததும்பாமலிருக்க  பிடித்துக்கொண்டு  சலைக்காமல் ஊரணியிலிருந்து  தண்ணீல் எடுத்துவந்து  ஊற்றிக்கொண்டே   இருப்பவர்கள்தான்  நினைவில் வந்தார்கள். சிந்துவெளியில்  இவர்கள் குறியீடு  என்பது  சமய சடங்குகளுக்காக   சுமைதூக்குபவர்களாகயிருக்கவேண்டும்  என்று ஆய்வுலகில்  அனைவராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  ஏன்என்றால்  அனேகமாக கோட்டைகளில்,   பலிபீடம், சமயசடங்குள்,  கடவுளாக  இருக்கலாம்  என்று  ஒத்துப்போகம்  குறியீடுகள்  கண்டறியப்பட்டுள்ளது.   நேடியாக  இல்லையேன்றாலும்  அந்த குறியீடில்  நாம் இன்று பார்க்கும்  சுமைதாங்கி கல்லை  நினைவுபடுத்துகிறது  இல்லையா. மகாதேவன்  அவர்கள், இங்கு  அந்த குறியீடு   என்பது  அந்த வேலையை  செய்பவர்களின்  பட்டமாக  இருக்களாம்  என்கிறார்  காவுவோன் என்ற  பெயரில்.  இதை   திராவிடத்துடன்  இணைக்க  காவுவோன்  எ ன்பதிலிருக்கும் காவு,  காப்பாளர், சுமத்தல் என்ற  அடிப்படையில் பொறை என்பதற்கு  வந்து  சேரர் அரசவழியை அடைகிறார்.  பொறை, இரும்பொறை  என்பது  சேர மன்னர்களின் பட்டங்களில் ஒன்று.

புறநானூறு, பாடல் 2

‘..

வான வரம்பனை ! நீயோ, பெரும !

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,

நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை

ஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,

பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் !

..’

இந்த சேர மன்னர்கள்  இணைப்பை  உறுதிபடுத்த புறநானூறு இரண்டாம் பாடலை,  பொதுவாக  பாரதப்  போரிற்கு உணவு வழங்கியபெருமையை கூறுவதாக இருக்கும்  பாடலை சற்று வேறு பொருளில்  அந்த பாடல்  பாரதப்போரில்  பாண்டவர்களோடு போரில்  மாண்ட100வர்களுக்கு  படையலிடுவதை  அறமாக   கொண்ட  என்று  எடுத்துக்கொள்கிறார் . ஏன் 100வருக்கு என்பது தனி விளக்கம்.

மீண்டும் குறியீடுக்கு வந்தால்,  மூன்றாம் குறியீடு  இதுவரை  எந்த பொருளும்  அளிக்கவில்லை  என்றால்  அதை   குந்தியிருக்கும்  மனிதராக பார்த்தால்  பொருள்படும் .  அதில் முதுகுதண்டில் கொடிட்டு காட்டுவது  மூலம் பேய்,  அழிக்கவல்ல கடவுள் என்றும்  இதற்குமுர்/முருகு  என்று பெயர்.  வேர் சொல் அகராதி  மூலம்  முர் – முருக்கு ; முறித்தல்,  அழித்தல் என்ற பொருளிலும்  விளக்கம் கொண்டுமுருகன்  போர்  கடவுள்  சம்காரம்    செய்பவன்  என்று கொள்ளப்படுகிறது. அடுத்ததை  நாம்  கணிக்கலாம்,  ஆம் காவுவோன்  என்பது முருகனுக்கு  காவடி தான்! இது  அனுமானம் தான் என்றாலும்  இன்றும்  இருக்கும்  பழக்கங்களை கவனிக்க  வேண்டும்   காவடிகளில் கண்டிப்பாக  எதேனும்  சுமந்து செல்வார்கள்  இன்று  ஓரு  சம்பிருதாயமாக   சின்ன  சேம்பில்  ஒரு பொருள்  பொதுவாக வேண்டுதல் இல்லையேன்றால்  பஞ்சாமிர்த  பொருட்கள்.  இங்கே  சின்ன செய்தியாக , செட்டிநாடு  காவடி பழனிக்கு பாதயாத்திரை  சுமந்துவரும்படி    முன் காலத்தில்  பழனி  கோயிலிருந்து  இன்று அடிவாரத்திலிருக்கும்  சத்திரத்திலிருந்து   செய்தி வந்த  பிறகே  காவடிபுறப்படும் இது ஆதாரங்கள்  கிடைக்கப்பெற்ற   17ஆம் நூற்றாண்டிலிருந்து  தொடரும்  வரலாறு  . இந்த அடிப்படையில்  ஒரு கடமையாக செய்தல் முறை  வருகிறது.

கடைசியாக  இடையிலிருக்கும் குறியீடு, சாடி/கும்பம்  என்று பொருள். அதுதான்  பாரதத்தின்  மூலதனம்  போலும்(!)  அகத்தியர் குறியீடு,  கும்ப பிறப்பு  பெருமைகளை  பட்டங்களாக  கொண்ட  அரச வழிகளும்  இந்த பெருமை ஏதோ வித்தில் இதை உணர்ந்தவர்கள் அல்ல  இதை வழக்கமாகக்  கொண்டவர்கள்.  கும்பம்   அதில்  இருக்கும்  நீர் இது இல்லாத  முனிவர் யார், சாபம் ஏது, புன்னியம் தான் ஏது . இந்த  முறையை   கையாளும்  வாழ்த்துக்கள்  எத்தனை,  மங்கலம்  எத்தனை  எத்தனை,  தொன்மக் கதைகள்தாம்  எத்தனை.

இப்போதெல்லாம்  வரலாற்றை படிக்கையிலும் பின் பேசையிலும்,  நாயக்கர் கால சிற்பங்கள்,  அணைகள்,  சோழர் கால கலை, கோயில்கள்,  நீர் பாச முறைமைகள் என்று கலந்துரையாடலில்  அந்த காலத்தில்  எப்படி சாத்தியபடுத்தியிருப்பார்கள்  என்றுஅதிசியப்பதில்லை.  ஏனேன்றால்  அன்றிலிருந்து 1000  வருடங்கள் முன்பான தொடர்ச்சி  பெற்றவர்கள் சங்க இலக்கியம்  இன்னும் முழுமையாக  கிடைக்கப்பெற்றவர்கள்,  சங்க இலக்கியம் வாய்மொழி  தகவலாக  பெற்ற நிறைய  செய்திகளை  உள்ளடக்கியது  என்றுபார்த்தால் அதற்கும்  முன் பல வருடங்கள்  போக வேண்டும் .  அந்த  வகையில் அவை  பிற்கால சிந்துவெளி  காலகட்டம் தொடர்பு உறுதியேன்றால்  அந்த  அடிப்படையில்   சிந்துவெளி சரஸ்வதி நாகரிகம்  கி.பி 8000 வரை நீலக்கூடியது (!!).  பெருமை  பேசுவதைவிடவும்அந்த  அந்த காலகட்டங்களில் எந்த விதமா ன உபகரணங்கள்  எப்படி  பரிணாம  வளர்ச்சி அடைந்தது,  அறிவு கூர்மையடைந்தது எப்படி,  அவைகள்  எப்படி  பயன்படுத்தப்பட்டது  என்பதில் தான் கவனம்  இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.  உதாரணமாக வெண்முரசில்  பரிணாம வளர்ச்சியை  கவனிக்கும் போது நதி நகரங்களிருந்து கடல்  நகரங்களுக்கு  மாற வேண்டிய  குறிப்புகள் , வேளான்மையிலிருந்து   மேய்ச்சல்  நிலங்கள் கால்நடைகள்  முக்கியத்துவம்  பெறுவது  என்று வருவதை குறிப்பிடலாம் . அனைத்தவித்திலும்  அந்த அந்த உயரங்களை  அடைய  அனைத்தும்  வாய்க்கப்பெற்றவர்கள் என்பதை காலம் உணர்த்துகிறது மேலும்  இந்த காலத்தின்  நீலம் அதன்  தொடர்ச்சி தான்  சாமானியனுக்கு  முக்திக்கான தேடலை  உணர்த்துவதின்  அடிப்படையாக  கூடஇருக்கலாம் , ஏன் என்றால் இத்தனை  அனுபவங்களின்  பலன் தான்  என்ன என்று சிந்திக்கக்கூடிய  இழையை  இந்த கால  தொடர்ச்சி மறைமுகமாக உணர்த்துகிறது இல்லையா.

வெண்முரசு  என்னை பொருத்தவரையில் முக்கயத்துவங்களில்  பிரதானமானது  என்றால்  இதுதான்  அனைத்து  தொன்மங்களும் குடிக்கொண்டு  பல அறிவு சுரங்கங்களை  பெற்றும் அமைதியாக  இருக்கும், தேடினால் மட்டுமே கிடைக்கும்  பொக்கிஷங்கள்.  இவைதான் பாரதத்தின்  அந்த  தொடர்ச்சியை   கொண்டு செல்கின்றன  காலத்தொடு இங்கே  தோன்றியவர்களுக்கு  வாழத்  தகுதியானவற்றை  குறிப்பாகவும்  மறைபொருளாகவும் ஆசிரிவதித்துக்கொண்டே இருக்கிறது.

இதே  உளநிலையில்  இதே கற்பனையில், வரும்  நூற்றாண்டுகளில்  ஒரு தரவுப்போர்  முடிந்து அதிலிருந்து  சில நூற்றாண்டு   கடந்துமுற்றிலும் நிலையிழந்த  நிலையில் கிடைத்த பைட்ஸ்கலிருந்து நிலை  சீரமைக்கும்  முயற்சிக்கு  முதல் வெற்றியாக  வெண்முரசுஎன்றும்  அது பெரிய நூலாகயிருக்கலாம்  என்றும்  தகவல் கிடைக்கிறது அதன்  ஆசிரியரை குறித்த தடையங்களில்  கும்ப  பிறப்புபட்டம்  கொண்ட பெயர்  கிடைத்திருக்கிறது  என்று, சில கணிணிகள்  மொழி  ஆராய்ச்சிகளின்   ஆய்வு முடிவுகளாக நிழல் திரையில்அச்சிடலாம்! ;)

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

முந்தைய கட்டுரைநூலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பும் அ.முத்துலிங்கமும்