ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
வெளிப்படைத் தன்மை மற்றும் மொழிநடை மூலமாகத் தன்னையே அன்னியனாக உணரும் நிலையை அடைய முடியும் என அவர் கருதியிருக்கலாம். அந்நிலையை அடைதல் என்பதற்குச் செய்யப்படும் தவமாகக் கூட இந்த எழுத்தையும் அந்த எழுத்துக்களை உருவாக்க எடுத்துக் கொண்ட காலத்தையும் கருதக்கூட வாய்ப்புக்களுண்டு. எழுத்தைத் தவமாகக் கருதுவது இந்திய ஆன்மீக மரபில் உள்ள ஒன்றுதான்
ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள் அ ராமசாமி
காலச்சுமையில் அன்றாடம் வாழ்கின்ற வாழ்க்கையில் சந்திக்கிற விவகாரங்கள், உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்பு, வாடகை வீடுகளில் அவரின் சாதியால் படும் அவமானம், இரண்டாவது மகள் இறப்பு அதனால் ஏற்பட்ட விரக்தியால் வாசிப்பை அதிகப்படுத்துதல் என அவரின் வாழ்வியல் போராட்டங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. மேலும் அவர் புத்தகம் எழுதுகின்ற, பத்திரிகையில் எழுதுகின்ற அனுபவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். இருபுனைவுகளிலும் தலித் சமூகம் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள் கிராமத்தில் நடக்கின்ற காதல் விவகாரங்கள் எனப் பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன