அனைவருமெழுதுவது…

 shakul

நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

வணக்கம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

தற்போது நான் இருக்கும் கப்பலில் மிக குறைந்த இணையமே கிடைப்பதால் உங்கள் இணைய பக்கத்திற்கு என்னால் தினமும் வர இயலவில்லை .வெண்முரசை சுனிதா வாட்ஸ் அப்பில் அனுப்பி தருகிறாள் தினமும் .இன்று காலை உங்கள் பக்கத்தை திறந்த போது “நான் எழுதலாமா? பத்தாண்டுகளுக்கு முந்தைய கடிதம் இது .இதை எழுதியவர் இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளர்) என ஒரு கடிதம் பிரசுரமாகியிருந்தது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உங்களை சந்தித்தபோது சார் “இரண்டாண்டுகளாக உங்களை படித்தபின் எனக்கு எழுத வேண்டுமென தோன்றுகிறது. கொஞ்சம் எழுதியிருக்கிறேன்”என்றேன்

ஷாகுல், ‘நீங்கள் எழுதவேண்டும் உங்கள் கடுமையான பணி சுழல், தனிமையில் அதிகம் இருக்கிறீர்கள், தொடர் கடல் பயணம், எழுதுவது இரண்டு விஷயங்களுக்காக ஒன்று புகழ், பணத்திற்காக, இரண்டு உங்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் குறைக்கும்”என்றீர்கள். சில மாதங்களுக்கு பின் தமிழில் தட்டச்சு செய்ய கடினமாக இருக்கிறது என்றேன் .”கணினி இருக்கிறதல்லவா ,தொடர்ந்து பதினைந்து நாள் தட்டச்சு செய்தால் பழகிவிடுவாய்” என்றீர்கள் .

அதே மார்ச் மாதம் கொல்லிமலை வாசகர் சந்திப்பில் நண்பர் கிருஷ்ணன் அவர்கள் எனது ஈராக் அனுபவங்களை கேட்டுவிட்டு அதை எழுத சொன்னார் .அதற்க்கு முன்பு வரை என்னால் எழுத முடியும் என்பது எனக்கு தெரியாது .அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையில் ஈராக் போர்முனை அனுபவங்கள் என எனது வலைப்பூவில் எழுதினேன் .நீங்களும் உங்கள் தளத்தில் 2016 அக்டோபர் 31 ம் தியதி உங்கள் தளத்தில் சுட்டியை பகிர்ந்தீர்கள்.தற்போது அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து வெளிவரும் ஆனந்த சந்திரிகை எனும் மின் இதழில் தொடராக வெளிவருகிறது .நமது குழும நண்பர் ஆஸ்டின் வரதராஜன் அவர்கள் என்னை அந்த மின் இதழுக்கு அறிமுகபடுத்தினார்.அப்போது எழுதியதை மீண்டும் படித்து திருத்தங்கள் செய்து அனுப்புகிறேன் ,சேர்பதற்கும் ,நீக்குவதற்கும் நிறைய இருக்கிறது.ஒரு ஆசிரியராக இன்னும் நிறைய உங்களிடம் கற்றுகொள்வேன் .

அன்புடன்

ஷாகுல் ஹமீது

***.

ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காண்னொலிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.

https://drive.google.com/open?id=19oop8a70DLoaBjSSdqk7wAh_BKrqkbHA

***

ஈராக் போர் அனுபவங்கள் ஷாகுல் ஹமீது

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்