நூலகம்- கடிதங்கள்

indian-english-writers-600x400

 

நூலகம் எனும் அன்னை

அன்புள்ள ஜெ

 

பதிவு 2007 ஐ சார்ந்தது என்றாலும், தங்கள் கருத்து என்றும் உண்மையானதே, நானும் தங்களை 2015ல் தான் அறியத்தொடங்கினேன். திருவரம்பு, திருவட்டாறு பெருமாளை பார்க்க வேண்டுமென்று எண்ணியது அதனால் தான். விஷ்ணுபுரம் இன்னும் முதல் அத்தியாயம் தாண்டவில்லை, ஆனால் பிற நூல்களை படுத்துவிட்டேன்.

 

தங்கள் உரையில் நுஉஷா மொழி பற்றிய தகவல் புதியது. பெண்களுக்கு மட்டும் ஒரு பாஷை என்றால் ஆச்சர்யம்தான்.

 

தங்களின் வார்த்தைகள் “எனக்குப்படுகிறது, இலக்கியமும் அப்படி மொழிக்குள் செயல்படும் ஒரு மொழிதான் என. அதை பிறர் படிகக்லாம், புரியாது. அது ஒரு சிறுவட்டத்துக்குள் புழங்குவது. அவ்வட்டம் நுண்ணுணர்வும் கவனமும் உடையவர்களால் ஆன ஒன்று. அவர்கள் மிகச்சிறுபான்மையினர். அவர்களே சிந்திக்கிறார்கள், சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் இறந்தகாலத்தை தொகுத்து உருவாக்குபவர்கள் இவர்களே. இவர்கள்தான் நிகழ்காலத்தை வடிவமைக்கிறார்கள். எதிர்காலக் கனவுகளை உருவாக்குகிறார்கள்”

அருமை.

 

என் வாழ்வை மாற்றியது திருவேடகம் விவேகானந்த கல்லூரி நூலகம்தான், 2005ல்  அங்கு சாங்கிய காரிகை ஆங்கில புத்தகம் படித்தேன், அது தொடர்பான தமிழ் தேடல்தான் 2015ல் தங்கள் வலைதளத்தை எனக்கு அடையாளம் காட்டியது.

 

தத்துவத்துடன் இலக்கியம் படிக்கத்துவங்கியதும் அதனால்தான்.

 

பதிவுக்கு நன்றி

அன்புடன்

பகவதி

 

 

அன்புள்ள ஜெ

 

நூலகம் எனும் அன்னை பதிவு, இன்னொரு விஷயத்தையும் சொல்லத்தூண்டியது, மின் நூலகம் என்பது வருங்கால கட்டாய தேவை அதுவும் Kindle file formatடில். Kindle aapல் unlimited edition subscribe செய்தால் (சுமார் Rs.1400) ஒரு வருடத்திற்கு வேண்டிய புத்தகங்களை படிக்கலாம், சிக்கல் என்னவென்றால் கடந்த 5 ஆண்டுகளாகவே தான் இந்திய மொழிகள் கொஞ்சமாக சேர்க்கப்பட்டு வருகின்றன, எல்லா தமிழ் நூல்களும் வருவதற்கான வாய்ப்பு குறைவு, விகடன், கிழக்குபதிப்பக நூல்களையே பார்க்க முடிகிறது, சில வாசகர்களின் நேரடி மின்பதிப்பக உள்ளன. வர்த்தக ரீதியாக லாபந்தரும் நூல்கள் உடனே வருகின்றன. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் இதுபற்றி விவாதிக்க வேண்டும், அவரவர் அனுமதியுடன் அரிய நூல்களை Kindle formatடில் மாற்ற முயற்சிக்க வேண்டும், pdf file format உதவாது படிக்க சலிப்பைத்தரும் . Kindle அப்படி இல்லை மொபைலில் அதுவே பக்கங்களையும் எழுத்துருவையும் திரை அளவுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளும், பக்கங்களை குறிக்கலாம், முக்கிய வாசகங்களை குறிக்கலாம், தனிக்குறிப்பேடு உருவாக்கலாம், தனி அகராதி நினைவில் வைக்கும், வண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம். ஒரு புத்தகம் போன்றே பயன்படுத்த முடியும், சொல்லப்போனால் இன்னும் சிறப்பாகவே பயன்படுத்தலாம். பலருக்கு இது தெரியாமலே Kindle mobile app பயன்படுத்தாமல் உள்ளனர். சிலர் Kindle device படுத்துகிறார்கள் ஆனால் சராசரி வாசகனுக்கு அது தனி செலவு வைக்கும், சாத்தியமில்லை. தங்களின் நூல்களை Kindle appல் வாங்கித்தான் படித்து வருகின்றேன். மின் நூலகம் கண்டிப்பாக வர வேண்டும், எல்லா எழுத்தாளர்களும் வாசகர்களும் இணையலாம், எப்பொழுதும் விவாதிக்கலாம், கருத்துக்களை பகிரலாம், ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை உருவாக்கலாம். வறுமையில் உள்ள எழுத்தாளர்களை அவர் தம் எழுத்துக்களையும் மீட்கலாம்.

 

ஒரு எழுத்தாளர் பல நூலகங்களை கொண்டவர், வாசகர்கள் அதன் கிளை போன்றவர்கள்.

 

அன்புடன்

பகவதி

அன்புள்ள ஜெ

 

நூலகம் என்னும் அன்னை கட்டுரையை வாசித்தபோது ஒரு ஏக்கம் ஏற்பட்டது. இனி கொஞ்சம் கொஞ்சமாக நூலகங்கள் அழியும். நான் பார்த்தவரை புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்த நூலகங்களே கூட அழிந்துகொண்டுதான் இருக்கின்றன. நூலகங்களின் தேவை குறைந்துவருகிறது. மின்னூல் நூலகம் என்ற தேவையை இல்லாமலாக்கிவிடும். நூலகத்தை எண்ணி நாம் பெருமூச்சுவிடும் காலம் வந்துகொண்டிருக்கிறது

 

செல்வக்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59
அடுத்த கட்டுரைபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி