காப்பீடு, இரண்டு முட்டாள்கள்

Medical-Insurance

காப்பீட்டில் மோசடிகள்
காப்பீடு -கடிதங்கள்
காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்
வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்

ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு போட்டிருந்தேன். ஆண்டுக்கு 60 ஆயிரம். இரண்டு ஆண்டு கட்டிவிட்டேன். இம்முறை மீண்டும் அதைப்புதுப்பிக்கவேண்டும். நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன். நான் அறிந்த செய்திகளின்படி இந்தப்பெரிய தொகைக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகப்பெரிய மோசடி. கட்டிய காசு திரும்பக் கிடைக்கப்போவதில்லை- எந்நிலையிலும்.

முகவர் பணிவாக “சரிசார், பாதியா குறைச்சிடலாம்” என்றார். “அதே சீனியாரிட்டி சார். பிரீமியத்தை குறைச்சுக்கலாம்… பத்துலட்சம் போட்டுக்கலாம்” ஒருவழியாகத் தயங்கி கடைசியில் இன்று வரச்சொன்னேன். “நீங்க சொல்றது உண்மைதான் சார். பல பிரச்சினைகள் இருக்கு. சொன்னபடி பத்துலட்சம் போட்டுக்கலாம்சார். கம்மி போட்டுக்கலாம்”

சரி வீடுதேடி வந்திருக்கிறானே என்று “என்ன பிரீமியம்?” என்றேன். “சார், அம்பத்தெட்டாயிரம் ஆகுது… உங்களுக்காக ரெண்டாயிரம் பிரிமியம் கம்மி ப்ண்றோம் சார்…” ஒருகணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கோபம் தலைக்கேற “கிளம்பு” என்றேன். “சர் ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன்” என்று ஆரம்பித்தான். “இப்பவே கெளம்பிடு…. மரியாத கெட்டுப்போயிரும்.. ” அவன் “ஆக்சுவலா உங்களுக்கு எப்டீன்னு சொல்றேன் சார்…” என்றான். “ வெளியே போ” என்று கூச்சலிட்டேன். ”போ…” என்று துரத்தியபின்னரும் அடங்கவில்லை.

ஒருலட்சத்தி இருபதாயிரம் வீண். ஆனால் ஒரு முட்டாள் தன்னைவிட முட்டாள் என என்னை நினைத்து அது உண்மை என நிரூபித்தும் விட்டான் என நினைக்கையில்தான் கொதிக்கிறது.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46
அடுத்த கட்டுரைசொல்லரசி