சுபாஷ் பாலேக்கர்

subhashP

அன்புள்ள ஜெ,

முருங்கை  விவசாயத்தில் சாதித்தவரின்  புகைப்படத்துடன் கூடிய கட்டுரையை  படித்துவிட்டு, அவரிடம்  பேசினேன். பேச்சின் நடுவே  zero budget  விவசாயம் செய்யப்போவதாக  சொன்னேன். உடனே நண்பர்  “நம்மாழ்வாரை  காப்பியடித்து  சுற்றிவரும்  அவர்ஒரு பிராடு  தம்பி அவரை நம்பாதீர்கள்” என்றார்.

ஆந்திர அரசு  திரு சுபாஷ் பாலேக்கர் அவர்களை  தனதுவிவசாய ஆலோசகராக  நியமித்து  கிட்டத்தட்ட 9,000 பேர் கலந்து கொண்ட  இரண்டு  பெரிய  பயிற்சி  பட்டறைகளை  அரசின் சார்பாக நடத்தியது.  இதன்  பின்னர் திரு சுபாஷ்  பாலேக்கரின்  zero budget  புத்தகங்களை  முழுவதும் வாங்கி  வாசித்தேன்.

மிகப்பெரிய  முயற்சி. தனியொருவராக.  கிட்டத்தட்ட பத்தாண்டுகள்  ஆராச்சியின் விளைவாக  கண்டறியப்பட்ட முடிவுகள்.   மிக எளியவழிமுறைகள்.  அதனை  தொடர்ந்த  அறிவியல் விளக்கங்கள்  என்று  தனிமனிதனின் சாத்தியதில்  செய்யக்கூடிய  உச்சங்களை  ஒரு விவசாயியாக  செய்து  அதனை ஆவணப்  படுத்தியுள்ளார்.

பின்பு அவரை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தளராத செயல் ஊக்கத்துடன், இந்தியா  முழுவதும்  சுற்றி இயற்கை விவசாயத்தின்  உத்திகளை பரப்பி வருகிறார். விவசாய நிலங்களை சுற்றி சுற்றி,  விவசாயிகளுடன் நேரடியான உரையாடலில்   இருக்கிறார். எவ்வித பண உதவியும் பெறுவதேஇல்லை.

முதலில் ஆந்திரா  ZBNF ஐ  கையில்எடுத்தது  அதனுடைய  நல்லமுடிவுகள்  வர  ஆரம்பித்ததை  அடுத்து  மற்ற மாநிலங்களும்  பின்பற்ற  ஆரம்பித்தன.  சமீபத்தில் கர்நாடக அரசு  சோதனை முயற்சியாக  செயல்படுத்த  50 கோடி ரூபாய்  ஒதுக்கியிருக்கிறது.

போன வாரம் “நிதி ஆயோக்”முழுவதுமாக ஆராய்ந்து zero  budget இயற்கை வேளாண்மை  உத்தியை  விவசாயிகளின்  வருமானத்தை  இரண்டுமடங்கு உயரச்செய்ய  பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளது.

நீர்  மேலாண்மை,  உர மேலாண்மை, மற்றும்  பூச்சிமருந்து  பயன்பாடு போன்றவற்றில்  மிகப்பெரியமாற்றத்தை  ஏற்படுத்தும்   முடிவு இது.

தமிழ்நாடு இதுவரை எந்தமுயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.நம்மாழ்வார்  நண்பர்களும்  என்ன சொல்லப் போகிறார்களோ.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

முந்தைய கட்டுரைபெண்களின் ஜன்னல்
அடுத்த கட்டுரைஆங்கிலமும் இந்தியாவும்