நேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்

manimozhi

மலேசியாவிலிருந்து எழுத்தாளரும் அரசியல் களப்பணியாளருமான மணிமொழியின் முன்னெடுப்பில் நேர்கோடு என்னும் இலக்கிய இருமாத இணைய இதழ் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திற்கும் உலக இலக்கிய மொழியாக்கத்திற்குமானது இவ்விதழ். பலதளங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் செயல்படும் படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள்

நேர்கோடு வாசிப்புக்காக

mani

ஆசிரியர் குழு என்று உள்ளதா? யாரெல்லாம் நேர்கோட்டின் உருவாக்கத்தில் உங்களுடன் இணைந்தது?

மணிமொழி: நேர்கோடு எனது சொந்த வெளி. ஆதலால், அதன் வெளியைத் திடப் படுத்தும்வரை ஆசிரியர் குழுவென நான் நேர்கோட்டுக்காகத் தற்போதைக்கு உருவாக்க விரும்பவில்லை. அதோடு, தனியாகச் செயல்படும்போது அதிக தேடலும் அனுபவமும் கிடைப்பதால் அதை விட்டுக் கொடுக்கவும் எனக்கு மனமில்லை. இதன் உருவாக்கத்தில் நான் மட்டுமே இருக்கின்றேன். இருந்தபோதும், எழுத்தாளர்கள் இல்லாமல் இதழ் இல்லை. அவர்கள் வழங்கும் ஆக்கப்பூர்வமான படைப்புகள்தான் இதழோடு இணைந்து கொள்கின்றன. நம்பிக்கையான வார்த்தைகளை நண்பர்களுடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் பெருகிக் கொண்டே வருகின்றன.

வீ.அ.மணிமொழியுடன் ஒரு நேர்காணல்