கொற்றவை தொன்மமும் கவிதையும்

kotravai_FrontImage_201

 கொற்றவை வாங்க

அன்புடன் ஆசிரியருக்கு

நேற்று தற்செயலாக கொற்றவையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். முதல் பகுதியான நீர் மட்டும் வாசித்து முடித்தேன்.

கொற்றவையை நண்பர்களிடம் வாசிக்கச் சொல்லும் போது இப்பகுதியை மட்டும் சற்று கவனத்துடன் பொறுமையாக வாசிக்கச் சொல்வேன். நீங்கள் ஒரு உரையில் உங்களது நாவல்களில் தொடக்கத்தை கடினமானதாக அமைப்பதாகச் சொல்லி இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கொற்றவை ரப்பர் இந்த மூன்று நாவல்களிலும் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சவாலை அளிப்பதாலேயே ஒரு தேர்ந்த வாசகனை இப்படைப்புகள் சீண்டி அவனை உள்ளிழுக்கும் என்று முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது வாசிக்கும் போது வேறொன்று தோன்றுகிறது. இப்படைப்புகள் சற்றுஅதிகமாகவே வாசகனின் கற்பனையைக் கோருகின்றன. அதுவரை அவனுக்குள் இருந்த வரலாற்றுணர்வுடனும் மனப்படிமங்களுடனும் மோதுகின்றன.

கொற்றவையின் முதல் பகுதி தமிழ் நிலம் உருவாகி வந்திருப்பது குறித்த வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக கிடைக்கத் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தினைப் பற்றிய ஒரு “ஊக வரலாற்றை” முன்வைக்கிறது. மொழி திருந்தாத மக்கள் வாழும் கடல் சூழ்ந்த பெருநிலம் தொல்தமிழ்நாடு. வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதற்கு முந்தைய காலம் குறித்து இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்புகளைக் கொண்டு நீர் பகுதியில் தொல்தமிழர் வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இப்பகுதியை வாசிக்க சற்று சிரமம் தருவதாக மாற்றுவது ஒவ்வொரு வரியிலும் செலுத்தப்பட்டிருக்கும் செறிவும் அடர்த்தியுமே. குமரி முனையில் கடல் உள் நுழைந்து இரண்டு நகரங்கள் அழிந்த சித்திரம் மக்கள் நினைவின் வழியாக மிகுந்த உயிர்ப்புடனும் எழுகிறது.

பஃறுளி ஆற்றுக்கும் குமரிக்கோட்டுக்குமான நிலத்தில் வாழ்ந்தவர்கள் அடைந்த அலைச்சல்களை மிகத் தெளிவாக உள்வாங்க முடிகிறது. ஆனால் குமரியின் நில நீட்சி சில நூறு கிலோமீட்டர்கள் மட்டுமே கடலுக்குள் இருந்திருக்கலாம் என்பதையும் பழம்பாடல் தெளிவாகவே சொல்கிறது. ஆனால் அங்கு நிகழ்ந்த வாழ்க்கைச் சித்திரம் மிக வலுவான அடித்தளத்தை கொற்றவைக்கு அளிக்கிறது.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள ஜெ

கொற்றவை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஏறத்தாழ ஓராண்டாகிறது நான் இந்நாவலை வாசிக்கத் தொடங்கி. இதன் தொடக்க அத்தியாயங்களை என்னால் கடக்க முடியவில்லை. ஆனால் இப்போது மிகப்பெரிய மோகம் கொண்டிருப்பது அந்தப்பகுதிமேல் தான் . எட்டுபத்து தடவைக்குமேல் அதை வாசித்துவிட்டேன். அதைவிட்டுக் கடக்கவே முடியவில்லை

கொற்றவையை வாசிக்க நான் கண்டுகொண்ட வழி ஒன்றுண்டு. அதை ஒரு கதையாகவோ வரலாறாகவோ வாசிக்க்க்கூடாது. பல பகுதிகள் புதுக்கவிதைகளாகவே உள்ளன. கோவலனின் காமத்தையும் இசையையும் சொல்லும் பகுதிகளும் சரி, நீரர மகளிர் வரும் பகுதிகளும் சரி. கதையாக வாசித்தால் மேலும் என்ன என்று பார்க்க ஆரம்பிப்போம். அது ஒரு பொறுமையிழப்பை அளிக்கிறது. கவிதையாகவே வாசித்தால் அந்தப்பிரச்சினை இல்லை

இந்நாவலின் கட்டமைப்பின் முழுமை திகைக்க வைக்கிறது

சங்கரநாராயணன்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

கொற்றவை -கடிதம்

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

வெள்ளையானையும் கொற்றவையும்

கொற்றவையின் தொன்மங்கள்

கொற்றவையின் நீலம்

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை பித்து- 3

கொற்றவைப் பித்து- 2

கொற்றவை பித்து-1

கொற்றவை- கனவுகளின் வெளி

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

கொற்றவை ஒரு கடிதம்

கொற்றவை-கடிதம்

காடு, கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை – ஒரு கடிதம்

கொற்றவையும் சன்னதமும்

கொற்றவை கடிதம்

கொற்றவை-கடிதம்

கொற்றவை, ஒரு கட்டுரை

கொற்றவை-கடிதம்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

கொற்றவை கடிதம்

கொற்றவை

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்

கொற்றவை,கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்