அன்பு ஜெயமோகன்,
வணக்கம். நலமா? தங்களை சென்னையில் சந்தித்த போது விரிவாகப் பேச முடியவில்லை. நான் வேறு ஒரு இடத்திற்கு செல்ல அவசரத்தில் இருந்தது ஒரு காரணம். தவிரவும் முன் பின் நேரடி அறிமுகம் இல்லாமல் பேசத் தயக்கம் இருந்தது. நான் சொல்வனத்தில் எழுதி வந்த தொடர் பற்றித் தங்களிடம் குறிப்பிட்டேன். அது தற்போது முடிந்து விட்டது. அதற்கான கண்ணிகளைக் கீழே சுட்டியுள்ளேன். தங்களுக்கு எப்போதாவது நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும். இதை உங்களுக்கு அனுப்பக் காரணம் என் கண்ணில் படாத ஏதாவது கூறு தங்களுக்குத் தெரிந்து நீங்கள் கூறி அது என் மகனின் வளர்ச்சிக்கு உதவுமென்றால் எனக்கு மகிழ்ச்சியே.
அன்புடன்,
அஸ்வத்
***
அன்புள்ள அஸ்வத்
படித்துப்பார்க்கிறேன். இசை குறித்து பொதுவாக ஏதும் சொல்வதற்கில்லை. அவ்வப்போது கேட்பதைத்தவிர. இசைவரலாற்றை பொதுவான பண்பாட்டுவரலாற்றின் ஒரு பகுதியாக அணுகும் ஆர்வம் எனக்குண்டு, அவ்வளவுதான்
வாழ்த்துக்கள்
ஜெ
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 4
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 6
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 7
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 10
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12
- தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்