ரயில்மழை -கடிதங்கள்

rain-kerala1_0

ரயில்மழை

அன்புள்ள ஜெ,

எதனை உண்மை….இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமுறை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை;  மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்……

இவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு விந்தை. ஒவ்வொரு கணமும் உள்ளே நிகழும் உள்ளத்தை வெளியே இருக்கும் பருப்பொருட்களைக்கொண்டே சொல்லமுடியும் என்பதற்கு நிகரான விந்தை அது

ராமகிருஷ்ணன்

***

rama
ராமகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

தங்களின் ரயில் மழை போன்ற இயற்கை வர்ணனை சார்ந்த பதிவுகள் பயண கட்டுரைகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. தங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க இவை உதவுகின்றன. தங்களின் எண்ண ஓட்டத்துடன் பயணிக்க உதவுகின்றன. ஒரு இயற்கை நிகழ்வை, பயணத்தை எப்படி எழுத்தில் காட்சிப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.

சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் கட்டுரை எனக்கு ஐசக் அசிமோவை அறிமுகப்படுத்தியுள்ளது. படிக்கணும்.

கூடவே சிறுவயதில் படித்த பூந்தளிர் என்ற பத்திரிகை நியாபகம் வந்தது. சுப்பாண்டியின் சாகசம், கபீஷ் மறக்கவே முடியாது.

80களின் தினமலர் சிறுவர்மலரில் வந்த உயிரைத்தேடி என்று ஒரு படக்கதையும் நினைவுக்கு வந்தது.

நன்றி

அன்புடன்

பகவதி

***

BHAGAVATHY
பகவதி

அன்புள்ள ஜெ

ரயில்மழை போன்ற சிறிய குறிப்புகள் வழியாக நீங்கள் இன்னமும் மனசுக்கு அருகாமையில் வருகிறீர்கள். அந்த காட்சிகளில் நாங்களும் உங்களுடன் இருப்பதாக உணர்கிறோம். மழை ஒரு பெரிய விஷயம். அது நம்மை ஒரு விலங்கு போல குதூகலமாக ஆக்குகிறது. அதோடு காட்சிகள் பெரிய அர்த்தமில்லாமல் மனதை நிறைவாக ஆக்கிவிடுகின்றன. காலையிலே அதைப்போன்ற கட்டுரையை வாசிப்பது அந்த நாளை முழுசாக நிறைத்துவிடுகிறது

எஸ் ஆர் ராமசுப்ரமணியம்

***

 

முந்தைய கட்டுரைஅறிவின் வலைப்பாதை
அடுத்த கட்டுரைஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’