பயணத்தில்

சென்ற 19௧2-08 முதல் நான் பயணத்தில் இருக்கிறேன். ஈரோடு சென்று அங்கிருந்து குன்னூர் சென்று அவலாஞ்சி, பகாசுரன் மலைகளில் ஏறிவிட்டு இப்போது திரிச்சூரில் இருக்கிறேன். இங்கே ஆசிய நாடக விழா நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நான்குநாள் இங்கே இருப்பேன். ஆகவே பெரும்பாலான மின்னஞ்சல்களுக்கு பதில் போட முடியாத நிலை. விரைவிலேயே மின்னஞ்சல்களுக்கு பதில் போடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடுவே இதை அவசரமாக எழுதுகிறேன். அனேகமாக இன்று மொத்த கேரளத்திலேயே குடிக்காதவனாக நான் மட்டும்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். திரிச்சூர் நகரமே லேசாக ஆடிக்கொண்டிருக்கிறது
ஜெ

முந்தைய கட்டுரைகுருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]
அடுத்த கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3