தன்வழிகள்

nan

அன்புள்ள ஜெயமோகன்,

ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பி வந்த பின்பு உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்து ஒத்தி போட்டுக்கொண்டே காலம் கடந்துவிட்டது. எழுதனுமென்று நினைக்கும் போதெல்லாம் ஒரு சோம்பல் மற்றும் தயக்கம் தானாக வந்து விடுகிறது. “பக்தி,அறிவு,அப்பால் ” பதிவை படிக்க படிக்க உங்களுக்கு கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் மீண்டும் வந்தது.  எழுதலாமென்று முடிவு செய்து விட்டேன்

இப்போதைய என்னுடைய பிரச்னை (பல சமயம் என்னையும் மீறி) நான் யார்? என்னுடைய வேலை என்ன என்ற கேள்வி மனதில் வந்துவிடுகிறது? அதை எப்படி கண்டுபிடிப்பதென்ற வழியும் தெரியவில்லை. பல சமயம் இதனால் செய்ய வேண்டிய செயல்களை கடைசி வரை ஒத்தி போட்டு கொண்டே இருக்கிறேன்.

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். கடிதம் எனக்கு அரைகுறையாய் இருப்பதாய் படுகிறது. மன்னிக்கவும்! ஆனால் இப்படியே முதல் கடிதம் இருக்கட்டும் என்று படுகிறது.

அன்புள்ள

மோகன் நடராஜ்

***

அன்புள்ள மோகன்

இந்த கடிதத்திற்கு இணையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன்.. ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று. இருகோணங்களிலும் முன்னரே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். மீண்டும் சுட்டிகளை அளிக்கிறேன்.

ஒவ்வொருவரும் தனக்குரிய தளத்தை, தன்னால் ஆற்றப்படும் பங்களிப்பை, தனிப்பட்ட நிறைவை தேடியாகவேண்டும். அதன்பொருட்டே செயல்படவேண்டும். அதுவே நிறைவு அளிக்கும் வாழ்க்கை. ஆனால் அதற்காக ஒரு சமநிலையைப் பேணவும் வேண்டியிருக்கிறது. தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது

ஜெ

***

பார்க்க

நான்கு வேடங்கள்

எழுதலின் விதிகள்

இரண்டு முகம்

தேடியவர்களிடம் எஞ்சுவது

தன்னறம்

தன்வழிச்சேரல்

பதுங்குதல்

ஒருமரம்,மூன்று உயிர்கள்

செயலின்மையின் இனிய மது

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

விதிசமைப்பவர்கள்

சராசரி

விதிசமைப்பவனின் தினங்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26
அடுத்த கட்டுரைதற்கொலை -கடிதங்கள்