அன்புள்ள ஜெமோ,
வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் அனைவரும் நலம் தானே.
தங்களால் பாவண்ணனைப் பாராட்டுவோம் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாததால், அந்நிகழ்வு பற்றிப் பாவண்ணனின் நெருங்கிய நண்பர் திருஞானசம்பந்தம் எழுதிய கட்டுரையின் சுட்டி ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.
பாவண்ணனைப் பாராட்டுவோம் விழாவைப் பற்றி நண்பர் திருஞானம் எழுதியுள்ள கட்டுரை மலைகள்.காமில் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் ஒரு நாள் முழுக்க பாவண்ணன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பாவண்ணனின் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பைப் பாராட்டி “வாழ்நாள் சாதனையாளர் விருதும்”, ஒரு லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருஞானம் கட்டுரையின் சுட்டி:
நட்பின் தோட்டத்தில் பாவண்ணன் / திருஞானசம்பந்தம்
தங்களின் பார்வைக்கு என்னுடைய கவிதைத் தொகுப்பான உள்ளுருகும் பனிச்சாலை குறித்து, விளக்கு இலக்கிய விருது பெற்ற கவிஞர் சமயவேல் மலைகள்.காம் மின்னிதழில் எழுதிய கட்டுரையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிஞர் சமயவேல் கட்டுரையின் சுட்டி:
ஒவ்வொருவருக்குள்ளும் உருகும் பனிச்சாலைகள் – சமயவேல்
மே 20, 2018 ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த கூட்டத்தில், என்னுடைய கவிதைத்தொகுப்பான “உள்ளுருகும் பனிச்சஈலை” குறித்து ஆற்றிய உரையைத் தொகுத்து இயக்குநர் அம்ஷன் குமார் எழுதியுள்ள கட்டுரை மலைகள்.காம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. எழுதிய அம்ஷனுக்கும் வெளியிட்ட சிபிச்செல்வனுக்கும் நன்றிகள். என் கவிதைகள் குறித்து அன்று பேசிய எழுத்தாளர் இரா. முருகனும் தன் பேச்சைத் தொகுத்து ஒரு கட்டுரையாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் தரும்போது அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
அம்ஷன்குமார் கட்டுரையின் சுட்டி:
பி கே சிவக்குமாரின் கவிதைகள் அம்ஷன்குமார்
அன்புடன்,
பி.கே சிவகுமார்