தமிழ்கற்கும் வழி

அன்புள்ள ஜெ,

அலுவலக நண்பர் ஒருவருக்கு பரிசளிப்பதற்காக இன்று அமேஸானில் கொற்றவை ஆர்டர் செய்தேன். அதற்கு ஒரு ரிவியூ தான் இருந்தது. அது மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. “Verified Purchase” என்றிருப்பதால் உண்மையில் வாங்கியவரின் ரிவியூ தான் இது.

unnamed

அன்புள்ள சுரேஷ்

இதில் பிழை என்ன உள்ளது? கொற்றவை வழியாகவும் தமிழ் கற்கலாம். அதன்பின் தினத்தந்தியைப் படித்தால்தான் புதிர் போல இருக்கும்.

கேரளத்தில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணிபுரியும் மூத்த நண்பர் சில காலம் முன்பு லண்டன் சென்றார். அங்கே அவர் பேசும் ஆங்கிலம் எவருக்கும் புரியவில்லை. அவர் ஷேக்ஸ்பியர் நிபுணர். ஆனால் முனைவர் பட்டம் மில்டனைப்பற்றி. வகுப்புகளில் அவர் பொழியும் ஆங்கிலம் மாணவர்களை அதிரடிக்கும். ஆனால் ஆங்கிலம் கற்பது வேறு ஆங்கிலத்தில் புழங்குவது வேறு. அவருக்கு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்ற முடியும், பேசமுடியாது. கொற்றவை வழியாக தமிழ்கற்ற பெண்மணி தமிழில் பேசினால் இட்லிக்கு ஆணையிட்டால் தட்டில் வந்துசேர்வது என்னவாக இருக்கும்?

ஜெ

***

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது
அடுத்த கட்டுரைபாவண்ணன், பி.கே.சிவக்குமார் -சுட்டிகள்