குருவாயூரின் மேகம்

இன்று கிருஷ்ணன் இல்லாமல் ஒரு பாட்டு கேட்கமுடியாத உளநிலை. பழைய பாட்டு ஒன்றை கேட்டேன். ஏறத்தாழ எல்லாருமே தெரிந்தவர்கள்.

s.ramesan
எஸ்.ரமேசன்நாயர்.

எழுதியவர் எஸ்.ரமேசன் நாயர். குமரிமாவட்டத்தில் குமாரபுரத்தைச் சேர்ந்தவர். நண்பர் கே.பி.வினோதின் தாய்மாமன். மலையாளத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். சிலப்பதிகாரம், திருக்குறள், மற்றும் சங்கப்பாடல்களை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

jaya-vijaya_

இசையமைத்தவர் ஜயவிஜயன். இரட்டையர். செம்பை வைத்யநாத பாகவதரின் மாணவர்கள். ஜேசுதாஸுக்கு அவ்வகையில் இளையவர்கள். ஜயனின் மைந்தர்தான் மலையாள நடிகர் மனோஜ் கே ஜயன். நான் ஜயவிஜயனை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். திரிச்சூரில்.

download (1)

ஜேசுதாஸை ஒரே முறை லோகித தாஸ் அறிமுகம் செய்ய புன்னகைத்து ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். இவர்களை விட கிருஷ்ணனை தெரியும் என்று தோன்றுகிறது.

சந்தன சர்ச்சித என்பது அஷ்டபதியின் பாடல்தொடக்கம். அப்பாடலை ஒரு பெண் பாடி கேட்டபோது முற்றிலும் வேறொரு அனுபவமாக இருந்தது.