நாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள். குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாலை மூன்று மணிக்கு விஷால்ராஜா நாவல்குறித்து உரையாடுகிறார்.சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள் உரையாடல் நிகழவிருக்கிறது. அரைமணிநேரம் இடைவேளைக்குப்பின் மாலை ஆறுமணிக்கு அதே இடத்தில் தொடர்ந்து விருவிழா நிகழும்.
கலாப்ரியா, டி.பி ராஜீவன் ,அஜயன் பாலா, காளிப்பிரசாத் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்
நான் நாளைக் காலையில் சென்னை வந்துசேர்வேன். சத்யானந்த யோகமையத்தில் நண்பர்களுடன் தங்கியிருப்பேன். நாளை மறுநாள் ஊர்திரும்புகிறேன். ஈரோடு, கோவை என வெளியூரிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள்.
அனைவரும் இரு நிகழ்வுகளிலும் பங்குகொள்ளவேண்டுமென அழைக்கிறேன்