அஞ்சலி : ம.இலெ.தங்கப்பா

tha

 

தமிழ் மரபிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவரான ம.இலெ.தங்கப்பா மறைந்தார். புதுக்கவிதையின் எழுச்சியிலும் தொடர்ந்து மரபின் சந்தத்திற்கும் அணிகளுக்கும் ஆதரவாக நிலைகொண்டவர். மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். மரபான முறையிலேயே அவை அமைந்திருந்தன. கவிதைக்கான உள எழுச்சியைவிட சந்தத்தாலும் சொல்லழகாலும் உருவானவை அவை

 

ம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகளே குறிப்பிடத்தக்கவை. இறுதிக்காலத்தில் அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என நினைக்கிறேன்.

 

ம.இலெ. தங்கப்பா அவர்களுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1