ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…

tolstoy1

அன்புள்ள  ஆசானுக்கு ,

நலம் தானே ? . கடந்த  பத்து நாட்களாக  போரும் வாழ்வும்  நாவல்  படித்து  முடித்தேன்.தல்ஸ்தோய் என்ற மாமனிதரின் தரிசனத்தை நான் கண்டடைந்ததை  வாசிப்பனுபவமாக  எழுதியுள்ளேன். தல்ஸ்தோய்யை    நான்  உணர்ந்துக்கொள்ள  நான் வாசித்தவற்றைக்கொண்டு அவரை அடைய முயற்சி செய்தேன் அதன் விளைவாக இதை எழுதுகிறேன்.

” ஆகாயத்து  பறவைகள்  விதைப்பதில்லை  அறுவடை செய்வதுமில்லை ”   – பைபிள்

ரப்பர்  நாவலில்  பிரான்ஸிஸ்ஸின்   தரிசனமாக  இவ்வரி அமையும் .நாவலின்  மையதரிசனமாக  அமையும்  இவ்வரியை  ஆரம்ப நிலை வாசகனான நான் அன்று உணர்ந்துகொள்ளவில்லை , காலப்போக்கில்  அது வந்து அடையும் என்று  இருந்தேன்.

போரும் வாழ்வும்  என்ற  ஒரு செவ்விலக்கியத்தில்  மீண்டும் இதே வரியை நான்  படிக்கும்  போது  ஒரு மெல்லிய அதிர்வுடன் அதை உணர்ந்தேன். ஆன்டரூ  அடையும்  தரிசனமாக  வரும் இவ்வரியை  நான் மீண்டும் படிக்கும்  போது அது என்னை ஆட்கொண்டது.

போரும் வாழ்வும்  என்ற  நாவலை  கடந்த  பத்து  நாட்களாக பல புறசிக்கள்களுக்கு  மத்தியில் படித்து முடித்தேன். ஒரு முழுவாழ்வையே  வாழ்ந்த முடித்து வந்த ஒரு அனுபவத்தை  அது தந்தது. பல நுன்சித்தரிப்புகள் , ருஷ்ய வாழ்க்கை , பல மனித வாழ்க்கையின் சித்திரம் , யுத்தங்கள் .

இப்போது  நாவலை குறித்து பார்க்கும் போது அது   உங்கள் எழுத்துகளில் தான்  வந்து நின்கிறது  . மாஸ்கோ  என்ற நகரத்தை நான் விஷ்ணுபுரம் உடன்  ஒப்பிட்டு பார்த்தேன். மக்கள் காலி செய்து  சென்ற  மாஸ்கோ  எனக்கு அந்த  வெறுமை ஓடிப்போன  விஷ்ணுபுரம் நகரத்தை  தான் நீனைவுட்டியது. அங்கே மாஸ்கோ தீக்கிரை  ஆன போது இங்கே  விஷ்ணுபுரம்    நீரினால்  அழிகிறது. எல்லாம் இந்த கால வெள்ளத்தில் சிறு துளிகளாக சித்தரித்து. நாவலில்  வரும் போர் காட்சிகளும் , நுண்சித்தரிப்புகளும் நீங்கள்  அதை  ஏற்கனவே  வெண்முரசில்  பல இடங்களில்  எழுதி  இருப்பது  நினைவில்  வருகிறது .

மரணம் சார்ந்த  சித்தரிப்புகளும் அது சார்ந்த  விவாதமும்  என்னை  தாரசங்கர்  பானர்ஜியின்   ” ஆரோக்கிய நிகேதனம்” உடன்  பொருத்தி பார்க்க  வைக்கிறது . ஆன்ட்ரூவின்  மரணத்தையும்   ஜீவன் மஷாயின்  மரணத்தையும் ஏறக்குறைய ஒன்றுப்போலவே தோன்றுகிறது. இருவருமே மரணத்தை  எதிர் நோக்கி அதை எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆர்வத்தில்  இருக்கிறார்கள் . இருவரும் தன் மரணத்தின் மூலமாக தான் அடையும் நிலையை உணர்கிறார்கள்.  ஆன்ட்ரூ  அதை ஒரு விழிப்பாக  நினைக்க  ஜீவன் அதை விடுதலையாக நினைக்கிறார்.

நாவல் முழுவதும் வரும் அன்பையும், மனிதத்தையும் காந்தியை வைத்தே டால்ஸ்டாய்யை உணர முயற்சி செய்கிறேன். மானிடத்தின் மேல் அன்பையும்  நம்பிக்கையையும் காந்தி அடைய தல்ஸ்தோய்   உதவி இருக்கிறார் என்பதை  ஐயமில்லாமல் நான் பார்க்கிறேன்.

sugadev

இப்படி பலராக பரித்து தான் அந்த மாபெரும் மனிதர் அந்த மாபெரும் நாவலில் அளிக்கும் தரிசனத்தை அடைகிறேன்.  சரித்திரத்தில்  மாகாபெரிய மனிதனும் நிற்கும் இடம் ஒரு துளிதான் என்றும் ,  பல சம்பவங்கள் சேர்ந்து தான் ஒரு வாரலாற்றை  உருவாக்குகிறது என்று காட்டுகிறது.

உங்கள் எழுத்துகளில்  சொல்ல வேண்டும் என்றால்  ” மிகச்சிறிய மனிதனுக்கு  இந்த மிகப்பெரிய  பிரபஞ்சம்  அளிக்கப்பட்டிருக்கிறது”.மகத்தான  நாவல்கள் நம்மை மறுபிறவி எடுக்க வைக்கும் என்றீர்கள்  ஆம் அதை நான்  உணர்ந்து கொண்டேன்.

நன்றி ,

சுகதேவ்.

மேட்டூர்.

வாழ்க்கையின் விசுவரூபம்

போரும் அமைதியும் வாசிப்பும்

தல்ஸ்தோயின் மனைவி

கனவுபூமியும் கால்தளையும்

ஆண்,பெண்,சமூகம் – இருகடிதங்கள்

அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?

அசடனும் ஞானியும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7
அடுத்த கட்டுரைகைப்பை – மேலும் கடிதங்கள்