மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர். இயற்பெயர் இளங்கோ. கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர்
- கண்டராதித்தன் கவிதைகள் (2002)
- சீதமண்டலம் (2009)
- திருச்சாழல் (2015)
என மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் திருச்சாழல் சென்ற இரண்டு ஆண்டுகளில் பெரிதும் வரவேற்கப்பட்ட கவிதைத் தொகுதி
விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது
மகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே சங்கர ராம சுப்ரமணியன்
கண்டராதித்தன் கவிதைகள் பற்றி- அஜயன்பாலா
கண்டராதித்தன் கவிதைகள் பற்றி அ ராமசாமி
கண்டராதித்தன் கவிதைகள் 1
கண்டராதித்தன் கவிதைகள் 2
கண்டராதித்தன் கவிதைகள் 3- [திருச்சாழல் தொகுதியில் இருந்து]
கண்டராதித்தன் கவிதைகள் 4
கண்டராதித்தன் கவிதைகள் 5
கண்டராதித்தன் கவிதைகள் 6