வேணுவின் கவிதை

Its-Frog-Jumping-Jubilee-Day

தவளை

நீங்கள் நிறுத்தக்கூட தேவையில்லை.

அது உங்களால் இயலாத காரியம்.

விரைந்து செல்லும் உங்கள் காலச்சக்கரம்

வேறு கதியில் சுழல்கிறது.

 

ஆனால்

ஒரே ஒரு மந்திர கணம்

நீங்கள் தயங்கினால் போதும்

நான் தப்பித்துக் கொள்வேன்.

 

இதோ

ஒரே ஒரு தாவல்தான்

தவளை நான் பிழைத்திருப்பேன்.

 

(வேணு வேட்ராயன்)

 

வேணு வெட்ராயன்
வேணு வெட்ராயன்

 

இது சமீபத்தில் நான் படித்த நல்ல கவிதை, காலச் சக்கரம் என்கிற சொல் தடத்துவ எடை கூட்டப்பட்டது  போல முதலில் பட்டது, படித்து முடித்து நேரம் செல்லச் செல்ல நம்மை பிடித்துள்ளவர்களின் பிடித்துள்ளவைகளின் முதுகு அவைகளின்  சக்திக்கு அப்பாற்பட்ட சக்கரத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. விரும்பினாலும் சுழற்சியை நிறுத்த இயலாது.

முதலில் அந்த சக்கரம் குடும்பம், பிறகு சமூகம், பிறகு கலாச்சாரம், பிறகு கடவுள் என மனதிற்குள் விரிகிறது.

தன்னை இருவாழி தவளையாக உணரும் ஒன்றின் ஒரே கோரிக்கை சற்று விசை குறைக என்பது தான்.  தாவுவதில் ஒரு அங்கதம் உள்ளது, மெல்லிய புன்னகையை நமக்குள் அது படர்த்தும்.

வேணு தனது கவிதையை எழுதிவிட்டார்

கிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைசெந்நா வேங்கை
அடுத்த கட்டுரைஅம்மா வந்தாள் – கடிதங்கள்