செந்நா வேங்கை

bloody_tiger_by_juani0villanos

வெண்முரசு நாவல்வரிசையின் பதினெட்டாவது நாவல் செந்நா வேங்கை. யானை மத்தகத்தைப் பிளந்து குருதி உண்டு முகவாய் நக்கிப் படுத்திருக்கும் அன்னை வேங்கை குருக்ஷேத்திரப் போர்நிலம்தான். அங்கே அறமும் மெய்ஞானமும் வென்றிருக்கலாம். ஆனால் எல்லாப் போர்க்களங்களும் அடிப்படையில் கொலைவெளிகள் மட்டுமே.

இதை தொடங்குவதற்காக சிலநாட்களாகவே ஊரில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். இன்று தொடங்கிவிட்டேன். சில பகுதிகளாவது முன்னால் சென்றால் நன்று.

ஜூன்மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிவரும்.

ஜெ

வெண்முரசுவிவாதங்கள்

முந்தைய கட்டுரைவிரல்நுனி வண்ணத்துப்பூச்சி
அடுத்த கட்டுரைவேணுவின் கவிதை