செவிநுகர் கனிகள்

bhim

அன்புள்ள ஜெ,
ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்தது “உமக்கு எதிரான ஆயுதங்கள் கை கூடாமல் போம்” என. உங்களையே நினைத்துக்கொண்டேன் . நிற்க.
பீம்சென் ஜோஷி கேட்டிருக்கிறீர்களா? தங்கள் தளத்தில் தேடியபோது இல்லாதது சற்றே ஏமாற்றம் அளித்தது. தான் வாழும் காலத்திலேயே தனக்கான உச்சபட்ச அங்கீகாரங்கள் அனைத்தையும் கண்டவர், பாரத் ரத்னா உட்பட.பீம்சென் ஜோஷியை கேட்க ஆரம்பிப்பதற்கு அவருடைய கன்னட பஜன்ஸ் சரியான நுழைவாயில். You Tube ல் கிடைக்கிறது. “பாக்யதா  லட்சுமி பாரம்மா”  வித்யாசமான அனுபவத்தை அளித்தது. சற்றே haunting ஆன பஜன்.  கம்பீரமான சற்றே மிரட்டுகிற குரல். என்னதான் இருந்தாலும் கடைசியில் அவர் கொஞ்சுகிற கொஞ்சல் கெஞ்சுகிற கெஞ்சல், பார்க்கிறவர் கண்களுக்கு லக்ஷ்மியை அழைத்துக்கொண்டே வந்து விடுகிறார். கேட்டுக் கரையலாம்.
மற்றொரு பாடலான “கைலாசவாசா” வில் “தைல தாரயந்தே மனசு கொடு” (எண்ணெய் ஒழுக்கைப்போல உன்னை அடைய)என்கிறார். அவிசுவாசியாக இருந்தாலும் அதையே கேட்க தோன்றுகிறது.
பழைய ஞாபகங்களைக் கொண்டுவந்த பண்டிட்ஜியின் ஒரு தேச பக்திப்பாடல்.
அன்புள்ள,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன்
பீம்சேன் ஜோஷி கேட்பதுண்டு. இந்த்ராயனி காத்தி என்னும் அவருடைய பாடல் எனக்கு ஒரு தனி பித்தை அளிப்பது. ஆனால் என்னை இசைகேட்பவன் என சொல்லிக்கொள்ள முடியாது. கேட்பதுண்டு, அவ்வளவுதான். இசை சும்மா ஒரு குளியல்போடுவதுபோல. அதன் வழியாக அரிதாகவே நெடுந்தொலைவு செல்கிறேன்.
ஜெ
முந்தைய கட்டுரைமுயலின் அமைதி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்