தூத்துக்குடி

Gandhi 4

ஊரிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அப்பால், செய்திகளிலிருந்து மிகமிக அப்பால், தனிமையில் இருக்கிறேன். இங்கிருந்து நோக்குகையில் இப்போதிருக்கும் தவிப்பையும் வெறுமையையும் மேலும் செறிவூட்டுகிறது தூத்துக்குடிப் படுகொலைகள். எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத நேரடி வன்முறை இது.  உரிமைக்காகப்போராடும் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. நேரடியான கொலை என்பது ஒரு வெறியாட்டம்.  எவராயினும் இதை நிகழ்த்தியவர்கள், இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இல்லையேல் ஜனநாயகம் அழியும். நீண்டகால அளவில் அனைத்துப் பண்பாடுகளும் அழியும். இத்தருணத்தில் என் துயரையும் கொதிப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன்

முந்தைய கட்டுரைபொருள்மயக்கம்
அடுத்த கட்டுரைகம்பன் உரை -கடிதங்கள்