நாட்டுப்புறக் கலைவிழா

நண்பர் ஹரிகிருஷ்ணன் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட நான்காண்டுகளாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்பொருட்டு அவர் நடத்திவரும் கலை விழாவும் பரிசளிப்பும் மிக முக்கியமான சேவையாக இப்போது மாறி விட்டிருக்கிறது

‘அன்புடையீர் வணக்கம்,

வழமை போலவே இவ்வருடமும் மணல்வீடும், களரியும் இணைந்து நடத்தும் நிகழ்த்துக் கலைஞர்களுக்கான பாராட்டு விழா வருகிற 25-12-2010 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கிறது. அது சமயம் தங்களது மேலான வருகையையும், நிதி உதவியையும் எதிர்பார்க்கிறேன். இயன்ற அளவு தொகையை கீழ்க்காணும் வங்கிக் கணக்கெண்ணில் செலுத்தி உதவவும்.

M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C – 534323956

மிக்க அன்புடன்,
மு.ஹரிகிருஷ்ணன்