சமீபத்திய கதைகளில், அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில், கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம். தேர்ந்த எழுத்தாளனின் கதை போல பிசிறில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சிக்கலான உள்முடிச்சுகளை கொண்டுள்ள இந்தகதையை விஷால்ராஜா எழுத எத்தனை நாட்கள் காத்திருந்தார் என தெரியவில்லை. ராபின்சன் குருசோ போன்று பயணத்தை, ஒரு ஃபன்டசியை வெளிப்படுத்துகிற கதை. தத்துவமும் தொன்மமும் கலந்த கதையாகவும் இருக்கிறது. ஸெல்மா லாகர் லெவ் எழுதிய தேவமலர் கதைபோன்று கற்பனை அழகியலையும், மோட்சப் பயணம் போன்று நீண்டபயணத்தையும் நினைவுபடுத்துகிறது இந்தக்கதை.
இலக்கியம் முடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை