ஊட்டி கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,
முகாமிற்க்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் மிக நெருக்கமாக பழகினார்கள். அனைத்தும் மேலாக ஆசிரியர்களைநேரில் கண்டது மிக நிறைவாக இருந்தது. கேட்க வேண்டும் என்ற கேள்விகள்மறந்து அவர்களின் இருப்பே நிறைவை அளித்தன.

முதல் நாள் அமர்வில் காளியின் காரணம் சிறுகதை விவாதிக்கபட்டது.இதுபோல் கூட்டாக விவாதிப்பதின் மூலம் நாம் பார்க்காத பல கோணங்கள்மேலெழுந்து வந்தன. முக்கியமாக சிறுகதை விவாதம் மூலம் சிறுகதையின்வடிவங்கள் மிக விரிவாக விவாதித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கதையின்முக்கிய பேசுபொருளான சாலிகிராமகல் வழிப்பாடு என்பது இச்லாமியர்களின்
படைஎடுப்புக்குபின் பரவலானது என்றும் அதற்க்குமுன்னர் துறவிகளிடம் இந்தமுறை இருந்தன என்பது ஆச்சரர்யமாக இருந்தது. இந்த கதையின் வடிவம் மிகபெரியபேசுபொருளாக அமைந்தது.

இரண்டாவது அமர்வாக பாரி தேர்ந்தெடுத்த ஹிக்விட்டா சிறுகதைவிவாதிக்கபட்டது. பாரி ஒரு பொது சகன் போகாத பல தளங்களை தொட்டு திறந்துவிவதாத்தை தொடங்கி வைத்தது மிகவும் அருமையாக இருந்தது. முக்கியமாககதையின் மைய பேசுபொருளான மீறல் பற்றிய விளக்கம் மற்றும் அதைஒட்டி அவர்கண்டடைந்த தரிசனம் வியப்பில் ஆழ்த்தியது. அந்த மீறலுக்கான காரணம் ஒருவிதமான தயக்கததையும் எமாற்றத்தையும் எனக்கு அளித்துகொண்டே இருந்தது.ஆனால் அவற்றை கடக்கும் விதமாக உங்களின் விளக்கம் அமைந்தது. Liberation
theology என்ற செய்தி முற்றிலும் புதியதாகவும் அதே நேர்த்தில் கதையின்மையமும் சரியாக பிடிபட உதவியாக இருந்தன. நானும் நண்பர்களும் இதைப்பற்றிமிக நீண்ட நேரம் விவாதித்தது நிறைவை அளித்தது. மற்ற கிருத்தவபாதிரியார்களுக்கும் இந்த வகை பாதிரிமார்களுக்கும் ஒரே வித்தியாசம்இரண்டாமவர் எப்போதும் எதார்த்தவாழ்வின் சிடுக்குகளை அறிந்து அதற்க்குஎதிர்வி ஆற்றுபவர்களாகவும் இருப்பவர் என்பது கதையின் நாயகனின் இயல்பைஉணர்த்துவதாக இருந்தது. வடிவ அமைப்பில் இந்த கதை மிகவும் கச்சிதமாகஅமைந்து இருந்தது.
 

மூன்றாவது அமர்வாக நான் மிகவும் எதிர்பார்த்துவந்த கம்பராமாயணம்ஆரம்பம் ஆனது. யூத்த காண்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. முந்தைய கூடுகைகளைதவறவிட்டது மிகவும் சோர்வை தந்தது. பொதுவாக நாஞ்சில் பாடல்களைசொல்லும்போதே நமக்கு ஒருவிதமான வேகமும், உணர்வையும் ஊட்டிவிடுகிறார்.இப்படி சொல்லலாம். ஒரு பாடலை அந்த தருணத்தில் அந்த பாத்திரம் எப்படி பேசி
இருக்குமோ அப்படி சொல்லி சென்றார். ஒவ்வொரு பாடலுக்கும் தனியான விவாதமும்அதை ஒற்றி எழுந்த சந்தேகங்களுக்கு விரிவான பதில்களும் நிறைவாக இருந்தன.இப்படி ஒரு கூடுகை கம்பராமாயணத்திற்க்கு மட்டும் நடத்தும் இடங்கள்உள்ளனவா?

 

யுத்தகாண்டத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் யுத்தம் என்ற சொல்பயன்படுத்தவில்லை என்றும் மாறாக போர் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார். மந்திரப்பாடல்களில் வரும் பாடல்களில் ராவணனுக்கு எதிர்தரப்புகூறும் பாடல்களில் மெல்லின வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதுமேலும் சுவாரச்யத்தை அளித்தது. ராவணனின் மந்திரப்படலத்தில் ராவணனின்
ஜனநாயகத்தன்மை வெளிப்படும் தருணங்களில் மிக முக்கியமானதாககருதப்படுகிறது. அதேபோல் ஒரு காவித்தை படிக்கும் போது அதன் உயர்தன்மையைபொருட்படுத்தவேண்டுமே தவிர அதை நம் எளிய அறிதலுக்கு உட்படுத்தகூடாது.அதேபோல் காவியத்தில் உள்ள வைப்பு முறைகள் மிக முக்கியமாக கவனித்தல்வேண்டும்.

கோவை கம்பன் முழுதொகுப்பு
http://www.tamilvu.org/ta/library-l3700-html-l3700001-133876

கருத்திருமன் தொகுத்த 1000 பாடல்கள். நன்றி : மாயவரம் பிரபு.
http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2k0py&tag=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20:%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/40-aa.sa.ganasampanthan/ravannan.pdf
http://www.tamilvu.org/library/nationalized/pdf/40-aa.sa.ganasampanthan/tambeiereruver.pdf
http://www.tamilvu.org/library/nationalized/pdf/40-aa.sa.ganasampanthan/arasiyarmoover.pdf

பேரா.சுந்தரசண்முகனார்
http://www.tamilvu.org/library/nationalized/pdf/32-manaivarsundarashanmuganar/020.kitkinthakandaththiranayvu.pdf
http://www.tamilvu.org/library/nationalized/pdf/32-manaivarsundarashanmuganar/004.aranyakandaaayvu.pdf
http://www.tamilvu.org/library/nationalized/pdf/32-manaivarsundarashanmuganar/020.kitkinthakandaththiranayvu.pdf
http://www.tamilvu.org/library/nationalized/pdf/32-manaivarsundarashanmuganar/033.palakandappymphozhil.pdf

என் வரையில் கவிதை வாசிப்புக்கு இந்த உரையாடல்கள் பெரிதும் உதவியாகஇருந்தன. பல சிறுபிள்ளைதனமான கற்பிதங்களை இது கடக்க உதவியது. அதுவும்கவிதை வாசிப்பை ஒன்று இரண்டு என்று சூத்திரங்கள்போல் எடுத்து சொல்லாமல்சில கவிதைகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் விதிகளையும் அதைஒட்டிவிவாதங்களையும் அமைத்தது இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ள உதவியது.தேவதேவனுடனான சந்திப்பும், தாமரைக்கண்ணன் கொடுத்த அறிவுரைகளும் எனக்கும்மிகபெரிய திறப்பாக அமைந்தது.

பொதுவாக இப்படி நான் புரிந்துகொண்டுள்ளேன். கவிதையில் கூடுமானவரை ஒரே ஒருபடிமத்தை சொல்லிசெல்வது நல்லது முடிந்தவரை உருவகங்களை தவிர்த்தல் நலம்.உருவகங்கள் வாசகன் ஒரு கவிதையை விரித்து எடுப்பதற்க்கு தடையாகஅமைந்துவிடும். அப்புறம் கவிதை இயல்பாக நிகழ்ந்தால் நலம். பலர் சிலவாக்கியங்களாக எழுதி பின் கவிதையாக மற்ற முயற்சி செய்வர் இந்தயுக்திமூலம் கவிதை அதன் இயல்பை இழக்கும் என்பது உறுதி. பின்முடிந்தமட்டும் பயன்படுத்திய கற்பனைகளை முடிந்தவரை விலக்கி எழுதுதல்நலம். ஒரு கவிதைக்கு முக்கியமாக எப்பொதும் இருக்கவேண்டியது ஒருபுதுத்தன்மை மற்றும் ஒரு மர்மதன்மையும் இருக்கவேண்டும். தேவைஇல்லாமல்
நீட்டிமுழக்கமால் ஒரிரு வரிகளில் சொல்லி சென்றால் நலம். இப்படிசொல்லலாம். கவிதையில் ஒரு வரி சேர்க்கவும் நீக்கவும் கூடாது. இந்தஇடத்தில் குறளைப்பற்றி குறிப்பிட்டது மேலதிகமான தெளிவை அளித்தது.

சந்துரு அவர்களின் இந்தியக்கலை பற்றிய கலந்துரையாடல் மிகவும் சுவரசியமாகஇருந்தது. அவர் கடந்துவந்த பாதைகளைப்பற்றி விரிவாக பகிர்ந்துகொண்டார்.சந்தைப்படுத்துதல் மூலம் எப்படி ஒரு கலைஞன் பாதிக்கபடுகிறான் என்றுவிளக்கினார். அவரின் கோணத்தில் நம் மரபு இயற்க்கைக்கு மிக நெருக்கமாகஇருக்கிறது என்றும் அதை விளக்கி பேசினார். வரலாற்றில் எப்படி தனி சிற்பம்என்ற கருத்தில் இருந்து காட்சி சிற்பத்திற்க்கு வந்தது என்றுவிளக்கினார். திருக்குறுங்குடி ராமர் காட்சியைப்பற்றியும் மகாபலிபுரசிற்பங்களைப்பற்றி விரிவாக விளக்கினார். எப்படி ஒரு பார்வையாளனைஅந்தச்சிற்பத்தில் தக்க வைக்கபடுகிறான் என்று விளக்கினார். அனைத்துக்கும்முத்தாய்ப்பாக ஒரு கலையை எப்பொதும் ஒரு குழந்தையைப்போல் அணுகுங்கள் என்றுகூறினார்.

நாவல் பற்றி சிவமணி உடனான கலந்துரையாடல் மிகவும் அருமையாக அமைந்தது. தாம்நாவலை அணுகியவிதம் பற்றி விரிவாக பேசி அனைத்து வாசகர்களையும் உள்ளேஅழைத்துச்சென்றுவிட்டார். பின் அதில் அவர் ரசித்த தருணங்களை தொட்டுபேசினார். பின் ஒரு விவாதத்தில் இது அன்றைய சமகால பிரச்சனையைபற்றிமட்டுமே பேசியது என்று ஒரு சில உரையாடல்கள் வந்தன அதற்க்கு நீங்கள் அன்று
இருந்த அரசியல் சூழல் மற்றும் மிக முக்கியமாக ஒரு தத்துவ விவாதம்முடிந்து அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் வெளிவந்தது என்றது மேலதிகமான ஒருதெளிவை தந்தது.

சந்திரசேகர் அறிதல் முறைகள்பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தார்.கண்டிப்பாக ஒரு புதிய வாசகனுக்கு இது மிகப்பெரிய திறப்பாக அமைந்தது.திருமாவளவன் அவர்களின் உரையாடல் ஒரு பொதுவாசகன் தொடாத பல இடங்களை தொட்டுபேசியது அருமையாக இருந்தது.

மூன்றாம் நாள் அனைவரும் சென்றபின் காளி, ராஜகோபால் மற்றும் சதிஷ் உடன்ஆனநடைப்பயணம் இனிமையாக இருந்தது. இந்தப்பயணம் என்னுடைய நட்பு வட்டத்தைபெரிதாக்கிகொள்ள உதவியாக இருந்தது என்றால் அது மிகைஇல்லை.

நன்றி
-திருமலை

DSCN3787

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஊட்டி காவிய முகாம் குறித்த அறிவிப்பைப் பார்த்த உடனேயே அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டேன். இலக்கியம் தொடர்பான என் முதல் கூடுகையாக இது அமைந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

காவிய முகாமில் நான் தங்களை மட்டுமே காண முடியும் என்கிற ஆவலோடு வந்திருந்தேன். ஆனால் முதல் நாளே சுனில் கிருஷ்ணன், விஷால் இராஜா, சுசித்ரா. பி.ஏ.கிருஷ்ணன், தேவதேவன்,  முதலானோர்களை சந்தித்தேன். ஊட்டி காவிய முகாமிற்க்கு மட்டுமல்ல, இம்மாதிரியான இலக்கிய கூடுகைகளுக்கு நான் புதியவன் என்பதால், பல தயக்கங்களுடனேயே அனுகினேன்.

என் வாசிப்பு குறித்து நான் உருவாக்கி வைத்திருந்த பல விஷயங்களை நான் மறுபரிசிலனை செய்ய வேண்டும் என உணர்த்தியது காவிய முகாம். அங்கு நடந்த முழுவிவாதங்களையும் சிறு சிறு குறிப்புகளாக எடுத்துக் கொண்டேன். சிறுகதையின் மையம், கவிதையின் மொழி மற்றும் அது சுமந்து வரும் உருவகம் குறித்த விவாதம், நாவல் குறித்த கோட்பாடு அதன் பேசு பொருள் முதலியவை என் வாசிப்பு எல்லையை பரவலாக விரித்திருக்கிறது.

நல்ல வாசகன் தன் முன் இருக்கும் புத்தகத்திற்க்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். வாசித்து முடித்த பின்பு அப்புத்தகத்திலிருந்து நாம் சென்றடைய வேண்டிய தொலைவு என்பது அப்புத்தகம் குறித்த விவாதங்களினால் மட்டுமே சாத்தியாமாகும். சுயவிவாதம், நாமே இருதரப்பாக இருந்து விவாதம் செய்யும் போது, ஒரு புதிய வாசல் நமக்காக காத்திருக்கும். சுனில் கிருஷ்ணனின் நாவல் குறித்த விமர்சன அமர்வு (விமர்சனம் – ஒரு புரிதல்) சுய விவாதத்திற்காண ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. வாசகன் VS விமர்சகன் என்ற அளவில் செய்யப்படும் சுயவிவாதமானது புத்தகத்தின் வீச்சை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். விமர்சனம் குறித்து எனக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியது.

கவிதை குறித்தும் சிறுகதை குறித்தும் அமர்வில் விவாதித்த பல விஷயங்களை, ஒரு கட்டுரையாகவே எழுதலாம். ஒன்றில் இருந்து மற்றொன்று, அதிலிருந்து பிரிதொன்று என விவாதம் மூலம் நான் சென்று அடைந்த இடமானது, வெகு தொலைவு.

அடுத்த சந்திப்பில் நான் வாசிப்பில் சற்று தேறி இருப்பேன்.

 

நன்றி

பலராம கிருஷ்ணன்.

 

முந்தைய கட்டுரைகம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
அடுத்த கட்டுரைஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ