காஞ்சனையும் மகாமசானமும்

புதுமைப்பித்தன்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நேற்று உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இத்தோடு கட்டுரையின் இணையதள சுட்டியை இணைத்திருக்கிறேன். வழக்கமாக நான் எழுதுவது போலன்றி, சிறிய கட்டுரைதான்.
புதுமைப்பித்தனின் வேறு சில கதைகள் குறித்தும் என் வாசிப்பை எழுதிப்பார்த்திருக்கிறேன். ஏனோ, காஞ்சனை தொடர்பான கட்டுரையின் சுட்டியை உங்களுக்கு அனுப்பத் தோன்றுகிறது. நேரமிருந்தால் பார்க்கவும்.
அன்புடன்
பெருந்தேவி
perunthevi

அன்புள்ள பெருந்தேவி,

மகாமசானம் கதை குறித்த கட்டுரை சிறப்பாக இருந்தது. எல்லா விமர்சனங்களும் வாசகர் என்னும் நிலையில் இருந்து தொடங்கி மேலே செல்லும்போதே அழுத்தம் கொள்கின்றன. ஏனென்றால் வாசகருக்காகவே அவை எழுதப்பட்டுள்ளன. காஞ்சனை கட்டுரையும் முக்கியமானதே. ஆனால் அதில் ஆய்வாளரின் தோரணை வந்துவிட்டது. அங்கே எழுத்தாளன் ஆய்படுபொருளாக ஆகிவிடுகிறானோ என்று தோன்றியது. காஞ்சனை கதை வெவ்வேறு கதைச்சட்டகங்களையும் கதைக்குள் ஒரு காட்சிச் சட்டகத்தையும் கொண்டுள்ளது என்ற வாசிப்பு புதிய கோணத்தைத் திறக்கிறது. ஆனால் இயல்பான வாசகரின் கோணம் கட்டுரைக்கு இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்

இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் புதுமைப்பித்தன் மீண்டும் கண்டடையப்படுவது ஆச்சரியமானது. புனைவு எனும் மாயத்தில் மீண்டும் நம்பிக்கை கொள்ளச்செய்வது

ஜெ

முந்தைய கட்டுரைஊட்டி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் மொழியும்