பேரன்பிற்குரிய ஜெ,
வணக்கம். சில வருடங்களுக்கு முன்பு, காந்தியைப் பற்றிய கட்டுரைகளை தங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. உங்களின் எழுதகளின் வழியாகவே நான் அவரை அறிந்துகொள்ள ஆரம்பித்தேன் நாள் தோறும் முயன்று கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் இவ்வளவு பெரிய தாக்கத்தை காந்தி ஏற்படுத்துவார் என்று அதற்கு முன் நான் சற்றும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இன்று தினசரி வாழ்வின் அவரை நினையாது, படிக்காது ஒரு நாள் கூட கடப்பதில்லை.
அவரைபற்றிய புகைப்படங்களை, வரலாற்று சம்பவங்களை தேடிக்கொண்டிருக்கும் போது, பல புகைப்படங்களில் காந்தி என்னோடு உரையாடுவதாகவே உணர்ந்தேன். நான் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான விடைகளை அந்தப் புகைப்படங்களில் அசையாமல், பேசாமல் இருந்தபடி எனக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ஒரு சிறு முயற்சியாக காந்தியாரின் சொற்களை முயன்றவரை அதற்கு ஏற்ற புகைப்படங்களுடன் ஒழுங்குபடுத்தி தொகுக்க ஆரம்பித்து இருக்கிறேன். அவற்றை காந்தியசிந்தனை முகநூல் பக்கத்தில் தினமும் பதிவு செய்து வருகிறேன். என்னை போலவே பிற நண்பர்களுடனும் அப்படங்கள் ஏதோவொரு வகையில் உரையாடுவதை அறிந்த போது நெகிழ்ந்தேன். இந்தக் கடிதத்துடன் சில படங்களை இணைத்துள்ளேன்.
நன்றி,
தினேஷ் ராஜு