ஓஷோவின் கீதை உரை

c

அன்புள்ள ஜெ, வணக்கம்.

‘கீதை உரைநூல்கள்’ கடிதத்தில் கீதைக்கான இடம் இன்றிருக்கும் நிலைக்கு வந்ததற்கான காரணம் பற்றிய குறிப்பு சிறப்பு.

உரை நூல்களுக்கான பதிவில் ஓஷோ வின் உரை தவிர்க்கப்பட்டிருக்கிறதே? ‘பகவத்கீதை ஒரு தரிசனம்’ என்கிற தலைப்பிலான 18 நூல்களில் 12 தொகுப்புகள் படித்திருக்கிறேன். கீதையின் சுலோகங்கள் நவீன முறையிலும், அறிவியல் தர்க்கங்களுடனும் விளக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். வேறொரு பதிவில் ஓஷோவின் உரையை நீங்கள் பரிந்துரைத்ததாக நினைவு. எனவே இதில் விடுபட்டது தற்செயலானதா?

அன்புடன்,

எம்.எஸ். ராஜேந்திரன்

திருவண்ணாமலை

***

கீதை உரைநூல்கள்

அன்புள்ள ராஜேந்திரன்

கீதை உரைநூல்கள் வேறு கீதைசார்ந்த தத்துவச் சொல்லாடல்கள் வேறு. காந்தியின் அனாசக்தி யோகம், வினோபாவின் கீதைப்பேருரைகள், திலகரின் கீதாரகசியம் போன்றவை கீதை உரைகள் அல்ல, கீதைசார்ந்த சிந்தனைவிரிவுகள். அந்தவரிசையியில் வருவது ஓஷோவின் கீதைப்பேருரைத் தொடர்.

அவை அந்த ஆசிரியரை, அவருடைய கொள்கையை புரிந்துகொள்ள உதவுபவை. கீதை உரை என்பது கீதையின் சொற்களுக்கான விளக்கமே. அதிலும் ஆசிரியரின் நோக்கு இருகுமென்றாலும் அது கீதையின் விளக்கமாகவே இருக்கும்.நான் குறிப்பிட்ட பட்டியல் கீதையை அறியவிரும்பும் வாசகர்களுக்காக. அறிந்தபின் அதன்மீதான அனைத்துப்பார்வைகளையும் அறிய விரும்புபவர்கள் வாசிக்கவேண்டியவை மேலே சொன்ன நூல்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைகாலம்
அடுத்த கட்டுரைமெலட்டூர் பாகவதமேளா