மெலட்டூருக்கு…

melatur

இன்று கிளம்பி நாளை தஞ்சை அருகே உள்ள மெலட்டூரில் நண்பர் ராகவின் இல்லத்தில் தங்கி பாகவதமேளா பார்க்கவிருக்கிறேன். அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் உடன்வருகிறார்கள். நண்பர்கள் ராஜகோபாலன், செல்வேந்திரன் குடும்பத்துடன் வருகிறார்கள். ஈரோடு கிருஷ்ணன், பாரி, மணவாளன் என இன்னொரு கோஷ்டியும் வருகிறது. 29 மாலை திரும்பி வருவதாகத் திட்டம்.

ஜெயக்குமார் பரத்வாஜ்
myself
ராகவ்

இம்முறை நண்பர் ஜெயக்குமார் பரத்வாஜ் பாடுகிறார். சென்ற சில ஆண்டுகளாகவே நண்பர்கள் ராகவ் இல்லத்தில் தங்கி பாகவதமேளா பார்த்துவருகிறார்கள். சென்றமுறை போகன் சென்றிருந்தார். ராகவ் விஷ்ணுபுரம் நண்பர்களில் அதிகம்பேசாதவர்களில் முக்கியமானவர்.

மூன்றே நாட்களில் அடுத்தபயணம், ஊட்டிக்கு. தொடர்பயணங்கள். நடுவே இமைக்கணம். இதுவரை எழுதியவற்றில் இந்த அளவுக்கு நேரத்தை விழுங்கிய நூல் ஒன்றில்லை.எதிலெதிலோ இருந்தெல்லாம் மீண்டு வரவேண்டியிருக்கிறது. ஒன்றில் உள்ளம் தீவிரமாக இருந்தால் எல்லாமே தீவிரமாகிவிடுகின்றன. எதிர்மறையானவையும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇலங்கை வாசகர்களும், இலக்கியமும்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-35