என் நெடுநாள் நண்பரும் திருச்சி வழக்கறிஞருமான செல்வராணி திருச்சியிலிருந்து தனியாக பைக்கில் லடாக் வரை செல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அருண்மொழியும் அவருமாக ஒரு குழுவுடன் லடாக் செல்வதாக இருந்தது. அருண்மொழி போகமுடியாத நிலை. ஆகவே செல்வராணி தனியாக பைக்கில் கிளம்பியிருக்கிறார்
சாகசம் போல என்னை மகிழ்விப்பது ஏதுமில்லை.சாகசம் என்பது நம் எல்லையை நாமே மீறுவது. நாம் யார் என்று கண்டுபிடிப்பது. செல்வராணியை இப்போது விரும்புவதுபோல் எப்போதுமே விரும்பியதில்லை. இமையம் வசப்படட்டும்