பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்

pey

அன்புள்ள ஆசானுக்கு ,

 

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் படித்தேன்.

மிக சிறப்பாக எழுதப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் வாசகனை கட்டி இழுத்து தன்னகத்தே வைத்துக்கொண்டது. விசேஷமாக என்னை ஆட்கொண்டது யட்சி சிறுகதை. மனது அந்த கதையுடனான ஒரு அழகிய இணைப்பை உணரத்தொடங்கியது. பனைமரத்து யட்சியின் கதையும் மிக மிக சாதாரணமாக ஒரு உறவில் நிகழக்கூடிய  சந்தோஷங்கள்,துக்கங்கள் சலிப்புகள், ஏமாற்றங்கள்  என்பன தத்ரூபமாக  ஆனால் ஒரு நுங்கின் 3 அறைகளுக்குள்ளே நிகழ்ந்திருக்கிறது . அத்தனை அழகு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு யட்சி இன்னும் வாழ்வதாய் தான் எனக்கு தோன்றுகிறது.

 

நான் இரண்டாம் புத்தகம் வசித்தாயிற்று..!!

 

நன்றி

 

அன்புடன்

 

நிரோஜினி  ரொபர்ட்

 

அன்புள்ள ஜெ

 

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் வாசித்தேன். எனக்கு பேய்க்கதைகள் பிடிக்கும். ஆனால் பேய்நம்பிக்கையெல்லாம் கிடையாது. அதிலுள்ள கற்பனைவளம் பிடிக்கும். ஆகவேதான் வாசித்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க இந்ததொகுதியின் கதைகள் வெவ்வேறு அளவில் விரிந்துகொண்டே போயின. உளவியல்கதைகள் என்று தம்பி போன்றவற்றைச் சொல்லலாம். ஒரு வீடு உள்ளுக்குள் விரிந்துகொண்டே இருக்கும் கதை கவிதை போல் உள்ளது. ஒரு பழைய புராணம்போல உள்ளது நுங்குக்கள் ஆச்சாரி குடும்பம் நடத்தும் கதை. எந்தக்கதையுமே கதை முடிந்தபின் யோசிக்கவைத்தால்தான் அது இலக்கியம். நான் வாசித்தவரை எடித் வார்ட்டனின் பேய்க்கதைகளுக்குத்தான் அந்த மதிப்பு இருக்கிறது. முக்கியமான தமிழ்ப்பேய்க்கதைகள் என்றால் இந்தத்தொகுப்பைத்தான் சொல்வேன்

 

ராதாகிருஷ்ணன் சீனிவாசன்

 

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் வாங்க

===========================================================

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் மதிப்புரை -சங்கர்

மேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் மதிப்புரை -சீனு

 

முந்தைய கட்டுரைமயில்மார்க் குடைகள்
அடுத்த கட்டுரைதாசியும் பெண்ணும்