அ.கா.பெருமாள்:குமரி

A.k.-Perumal-1

நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன், ஒரு உதவி.

நானும் கன்னியாகுமரிக்காரன்தான். திடீர் என்று கன்னியகுமாரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவல். அனேகமாக உங்கள் வலை பக்கத்தை படித்தபிறகு. இல்லை வணங்கான் கதையை படித்த பிறகு என்று நினைக்குறேன்.

ஐயா மார்சல் நேசமணி காங்கிரஸ் காரர் என்று ஒரு வெறுப்பில் அவரை பற்றி அதிகம் தெரியாமல் இருந்து வந்தேன் .உங்கள் வணங்கானை படித்த பின்பு தான் ஒரு ஞானம்.

சொந்த மண்ணின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலேயே ஏதேதோ ஊரை பற்றி படிக்கவும், சுற்றவும் விரும்புகிறோம் என்று.

எனக்கு அ கா பெருமாள் அவர்களின் தென் குமரியின் கதை புத்தகம் வேண்டும். நாகர்கோயில் – இல் எங்கே கிடைக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள்… வேறு புத்தகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்.

உங்களை இப்போது நினைக்கும் போது ரொம்ப பெருமை .நம்ம ஊரில் இவ்வளவு ஒரு பெரிய எழுத்தாளர் இருக்கிறார் என்று. நான் கல்லூரி படித்து முடிக்கும்போது (2006) கூட உங்களை பற்றி தெரியாமல் இருந்திருக்கிறேன். ராஜேஷ்குமார், பாலா குமாரன், சுஜாதா இவர்களை படித்து கொண்டிருந்த காலம் அப்போது, இத்தனைக்கும் தோவாளை இல் தன படித்தேன். பிறகு உங்கள் மாடன் மோட்சம் படிக்கும் போது அது தோவாளை இல் நடப்பதாகவே உணர்ந்தேன்.

பெங்களூரு சென்ற பிறகு தான் சாரு வின் எழுத்து அறிமுகமானது. எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவருடைய வலை பக்கத்தில் தான் நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனீர்கள். கன்னியாகுமரிக்காரர் என்றதும் கொஞ்சம் நாள் உங்கள் வலை பக்கத்தை படித்தேன் .ரொம்ப சிரமப்பட்டேன் உங்கள் எழுத்தை படிக்க. ஏறக்குறைய இரண்டு வருடம் சாருவின் புத்தகங்கள், அவர் பரிந்துரைக்கும் வேறு புத்தகங்களும் படித்திருக்கேன்.

அப்புறம் உங்களை படிக்கச் ஆரம்பித்து விட்டேன். முதலில் படித்தது வணங்கான் தான். ரொம்ப புல்லரிச்சு போச்சு, ரொம்ப நாளா அத பத்தியே யோசிச்சிருக்கேன். என்னோட ஊரு பள்ளியாடி பக்கம் கருங்கல் தான் (மாங்கரை கிராமம்).

அப்புறம் உலோகம், ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், அறம்.அறம்- கேள்வி பட்டவுடன் வாங்கி படிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாங்கவே இல்லை. காதலியை மறைந்து இருந்து பார்ப்போமே அது போல. வாங்கின பிறகும் படிக்காமல் சில நாட்கள் வைத்து பார்த்து கொண்டிருந்தேன். அதில் சோற்று கணக்கு தான் ரொம்ப பிடிச்சது. அப்புறம் ஓலை சிலுவை… அறம். யானை டாக்டர். என்னுடைய பொக்கிஷம் இது. நீங்களும் கூட

நட்புடன்…..

ரமேஷ் ராஜமணி

***

அன்புள்ள ரமேஷ்

தென்குமரியின் கதை தமிழினி வெளியீடு. நாகர்கோயில் சுதர்சன் புத்தகநிலையத்தில் [பிரபு ஓட்டல் எதிரில்] இருக்க வாய்ப்புண்டு

அ.கா.பெருமாள் அவர்களின் ஏறத்தாழ எல்லா நூல்களுமே குமரிமாவட்டத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள உதவிகரமானவை. பறக்கை, சுசீந்திரம். திருவட்டார் ஆலயங்களைப்பற்றி தனிநூல்கள் எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்திருக்கோயில்கள் என்ற நூல் வெளிவந்துள்ளது

அய்யா வைகுண்டரின் பாடல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். கவிமணி நூல்களையும் நாட்டார் கதைகளையும் பதிப்பித்திருக்கிறார். குமரிமாவட்ட வரலாற்றை விளக்கும் அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைகளை அச்சில்கொண்டுவந்திருக்கிறார்

என் எழுத்துக்களை தொடர்ந்து பரிக்கிறீர்கள் என்பது நிறைவளிக்கிறது. என் எழுத்துக்களுக்கு வாசகர் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின், வேறு எழுத்துக்களை வாசித்தபின், வந்துசேர்வதே நல்லது என நினைக்கிறேன்

ஜெ

***

சுசீந்திரம் ஆலயம் அ கா பெருமாள்
ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…
தேவசகாயம் பிள்ளை
நகர்நடுவே நடுக்காடு
வயக்காட்டு இசக்கி
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள் அறுபது
அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
சூழ இருத்தல்
பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

முந்தைய கட்டுரைசெல்லப்பா நினைவுப்பதிவு -அ.ராமசாமி
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46