இலங்கை வாசகர்களும், இலக்கியமும்

naveen

இலங்கைக்கு நவீன் சென்று வந்ததை ஒட்டி அவர் எழுதிய கட்டுரை மீது நான் எதிர்வினையாற்றியிருந்தேன். அதையொட்டி அனோஜன் பாலகிருஷ்ணன் எதிர்வினையை முன்வைத்திருந்தார். தன் கருத்தை வல்லினம் தளத்தில் நவீன் முன்வைத்திருக்கிறார்.

இலங்கை,நவீன்

இலங்கை,நவீன்,அனோஜன்

இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்

என்னுடைய எதிர்வினையின் சாராம்சமான உணர்வை இலங்கை வாசகர் சிலராவது புரிந்துகொண்டிருப்பார்கள், அவ்வாறு புரிந்துகொள்பவர்கள் மட்டுமே நவீன இலக்கியத்திற்கு முக்கியமானவர்கள்.

ஒர் அயல்நாட்டு எழுத்தாளன் வரும்போது அவனைப்பற்றி அறிந்துகொள்ளாமல் அவன் முன் தோன்றக்கூடாது என்பது ஒரு பண்பு. ஒவ்வொரு நவீனவாசகனுக்கும் உலகளாவிய தமிழிலக்கியம் குறித்த அறிமுகத்தையாவது அடைந்திருக்கவேண்டும் என்ற கடமை உள்ளது. எழுத்தாளனை வரவேற்பது என்பது அவனை வாசித்திருப்பது, குறைந்தபட்சமாவது அவன் படைப்புகளைப் பற்றிப் பேசுவதுதான்

தமிழிலக்கியம் என்பது நில எல்லை சார்ந்தது அல்ல.. உலகளாவிய ஒரு தமிழிலக்கியச் சித்திரம் நமக்குத்தேவை. இக்காரணத்தால்தான் இலங்கையில் நான் முக்கியமானவர்கள் என கருதும் அத்தனைபேரைப்பற்றியும் நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இலங்கையில்கூட அவ்வாறு இலங்கை எழுத்தாளர்களைப்பற்றி விரிவாக முழுமையாக எழுதியவர் எவருமில்லை. [மு.தளையசிங்கம்,கா.சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம்,சேரன், தெளிவத்தை ஜோசப்]. ஒட்டுமொத்தமாக இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கொடை குறித்து நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலில் ஒரு சித்திரம் உள்ளது.

வ. அ.இராசரத்திம்ன, எஸ்.எல்.எம்.ஹனீஃபா, ரஞ்சகுமார், சட்டநாதன் நோயல் நடேசன் ஆசி.கந்தராஜா  திருமாவளவன் கு றஜீபன் குறித்து எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை. ஈழப்பெண் கவிஞர்கள் உட்பட பலரைப்பற்றி எழுதிய கட்டுரைகள் இருபதுக்கும் மேல் இதழ்களில் சிதறியுள்ளன. கலாமோகன், ஷோபா சக்தி, தேவகாந்தன்  சயந்தன்  குறித்து விரிவாக எழுதி ஒரு நூலாக்க எண்ணம் உண்டு.

நான் எப்போதும் மதிப்பது செயல்படும் விசையைத்தான். இதில் உலகியல் லாபம் ஒன்றுமில்லை, நஷ்டம்தான். ஆனாலும் சமரசமில்லாமல் சோர்வில்லாமல் இயங்கவேண்டும். அவர்கள்தான் இலக்கியவாதிகள். இன்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நான் முழுமையாகத் தொடரவில்லை, வெண்முரசுக்குப்பின் அதைச் செய்யவேண்டும். யோ.கர்ணன் அவ்வகையில் அங்கே தீவிரமாகச் செயல்படுகிறார். இங்கிருப்பவர்களில் அகரமுதல்வன், வாசு முருகவேல் இருவரிடம் இருக்கும் வேகம் எனக்கு நிறைவளித்தது, அது அரசியலில் இருந்து இலக்கியம் நோக்கித் திரும்பவேண்டுமென நினைக்கிறேன். அனோஜன் பாலகிருஷ்ணன் என்றும் எனக்கு முக்கியமானவர். ரிஷான் ஷெரீஃப் , சர்மிளா செய்யித், சுயாந்தன் போன்ற ஒர் இளைய தலைமுறையினரை கவனித்துவருகிறேன். இன்னும் பலரை நான் முறையாக அறிமுகம் செய்து கொள்ளவேண்டும்.

இன்னொரு பக்கம் ஒர் இலக்கியவாசகன் தன் மொழியின் சிறந்த இலக்கியத்தை அறிந்திருக்கவேண்டும். விமர்சனமுறைமையுடன் அதை அவையில் முன்வைக்கவும் வேண்டும். உதாரணமாக, விஷ்ணுபுரம் இலக்கியவிழாவில் நவீனின் பேச்சு. மலேசிய இலக்கியம் குறித்த மிகக்கச்சிதமான முழுமையான உரை அது. எந்த உலகமேடையிலும் நானும் தமிழிலக்கியம் பற்றி அதைச் சொல்லமுடியும். அப்படிச் சொல்பவர்கள் மீதே எனக்கு மதிப்பு. இலக்கியம் என்பது ஒர் அறிவியக்கம், அது ஒவ்வொரு இலக்கியவாசகனிலும் செயல்படவேண்டும். அவன் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்விரண்டும் நிகழாதபோது அச்சூழல் குறித்த மதிப்பு இல்லாமலாகிறது. அவமதிப்பு உருவாவதை தவிர்க்கமுடியாது.இலக்கியவம்புகள் எங்குதான் இல்லை? இலக்கியத்தை வெறும் தரப்புகளாக குறுக்கும் ரசனைகெட்ட அரசியல்வாதிகள் இந்தத் தலைமுறையில் சென்றகாலங்களில் மதவாதிகள் செய்ததைச் செய்கிறார்கள். அவர்களைக் கடந்து இலக்கியத்தைப்பற்றிப் பேச சிலரேனும் இருக்கவேண்டும். மதிப்பீடுகள் மாறலாம், ஆனால் தன் தரப்பை இலக்கியத்தின்மீதான மதிப்புடன் இலக்கியத்தின் மொழியில் முன்வைக்கவேண்டும்.

இலக்கியவம்புகளை மட்டும் தெரிந்துவைத்திருப்பவன் இலக்கியவாசகன் அல்ல. இலக்கியவாதிகளின் பெயர்களை தெரிந்துவைத்திருப்பவனுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமே இல்லை. இலக்கியப்படைப்புக்களை அரசியல் மூலப்பொருட்களாக மட்டும் வாசிப்பவன் இலக்கியத்தினூடாகச் செல்லும் வழிப்போக்கன். தன் வாழ்க்கையைக்கொண்டு இலக்கியத்தை வாசிப்பவன், தன் உள்ளத்தில் ஒருபகுதியை அதற்கு அளிப்பவனே இலக்கியவாசகன். தமிழகத்திலும் எண்ணிக்கையில் முதல்மூன்று சாராரே மிகுதி. ஆனால் என்றுமிள்ள ஆழ்ந்த இலக்கியவாசகர்களால் மட்டுமே இங்கே இலக்கியம் வாழ்கிறது.

நல்லவாசகர்கள் அங்கே உண்டா? இருக்கிறார்கள். எனக்கே பலரைத் தெரியும். ஆனால் இருந்தால் போதாது செயல்படுங்கள் என்பதே என் குறிப்பின் சாரம். அக்குரலை கேட்க அங்கே எழுந்து வந்து கொண்டிருக்கும் இளையதலைமுறை வாசகர் சிலர் இருப்பார்கள். எப்போதும் அவர்களை நோக்கியே பேசிக்கொண்டிருக்கிறேன்

என்னுடைய குறிப்பு நிராகரிப்பு அல்ல, அறைகூவல் அல்லது சீண்டல். இந்த விவாதமேகூட தமிழ் வாசகர்களிடம் கவனியுங்கள், தெரிந்துகொள்ளுங்கள் என்னும் அழைப்புதான். பொதுவாக கொஞ்சம் முட்டல் மோதல் எல்லாம் இருந்தாலும் ஓர் இலக்கியச் சூழலில் இலக்கியம் குறித்த எந்த ப்பேச்சும் நல்லதுதான். அதிலும் இளையதலைமுறையினர் சண்டைபோடுவது இன்னும் நல்லது.

***

ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

இரு ஈழக்கடிதங்கள்

ஓர் ஈழ எழுத்தாளருக்கு…

சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு

இலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்

காற்றுசெல்லும் பாதை.

சர்மிளா ஸெய்யித்

பெரிய உயிர்களின் தேசம்

உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை

முடிவிலா இலையுதிர்தல்

எஸ்.எல்.எம்.ஹனீஃபா

மறுபக்கத்தின் குரல்கள்

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6

தெளிவத்தையின் மீன்கள் பற்றி…

***

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2
மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2
மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
நமக்குரிய சிலைகள்

***

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
அஞ்சலி-சிவத்தம்பி
***

espo

ஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1
யாழ்நிலத்துப்பாணன் -3
யாழ்நிலத்துப்பாணன் -2
எஸ்.பொ
 ***

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

***

cheran

ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு

***

a.muttu2

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து
சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
அ.முத்துலிங்கம் எழுத்துக்கு அறுபது.
ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம் சந்திப்பு
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்
அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு
தற்செயல்பெருக்கின் நெறி

***

 

’மீன்கள்’ தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

***
முந்தைய கட்டுரைபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்
அடுத்த கட்டுரைமெலட்டூருக்கு…