மயில்மார்க் குடைகள்

index

இரா முருகனின் இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்த நல்ல படைப்புகளில் ஒன்று. சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூளை தலைப்பிலிருந்தே நினைவூட்டுகிறது. கலை தன்னைச்  சூழ்ந்திருக்கும் வணிகத்தால், உலகியலால் சூறையாடப்படுவதன் சித்திரம் தொடர்ந்து தமிழில் எழுதப்பட்டு வருகிறது. இதுவும் அவ்வகை கதை

ஒரு பொது வாசிப்பில் ஒரு பாடகியின் வாழ்க்கையின் அவலம் என்றுதான் தோன்றும். ஆனால் மயில்மார்க் குடைக்கான விளம்பரம் முதல் கணவன் வரை எங்கெல்லாம் அவளுடைய இசை கசக்கி நுகரப்படுகிறது என்னும் அடியோட்டம் இதை நல்ல கதையாக ஆக்குகிறது

மயில் மார்க் குடைகள்

========================================================

இரா முருகன்
முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-33
அடுத்த கட்டுரைபேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்