இனிய ஜெயம்,
எப்போதும் கலை அறிவியல் குறித்து வித விதமான சாவி வார்த்தைகள் இட்டு யூ ட்யூப் இல் இலக்கின்றி எதையேனும் தேடி எதையேனும் புதிதாக கண்டு பரவசம் கொள்வது என் வினோத விளையாட்டுக்களில் ஒன்று.
அப்படி நேற்று இரவு கண்டடைந்து இதை. மரபணு, மூளை, அணு, காலம், சூழலியல், பரிணாமவியல் அனைத்து துறையும் சேர்ந்த வல்லுநர்கள் இங்கே சிம்பனி வழியே கற்று தருகிறார்கள்.
பிரமாதமான எடிட்டிங், மற்றும் நகாசு வேலைகள் கொண்ட இசை கோலம். கார்ல் சகன், ரிச்சட் டாக்கின்ஸ், டேவிட் அட்டன் பாரோ எல்லோரும் துல்லியமாக பாடுவது போலவே, இழைந்து வருகிறது இந்த இசைக்கோவை.
அறிவியல் என்பது யதார்த்தத்தின் கவிதை எனும் டாக்கின்ஸின் சொல் இன்றெல்லாம் என்னை தொடருகிறது ஒரு இசை துணுக்காக.
https://www.youtube.com/watch?v=tKjbHv_0KKY&list=PLtCvZ0jb6qCEzChoX7LqBOsGVfzrglp1V
கடலூர் சீனு
***