பிறந்தநாள்

9912_1

இன்று [22-4-2018]  என் பிறந்தநாள். வழக்கமாக பிறந்தநாட்களை நினைவில் வைத்திருப்பதில்லை. எவர் பிறந்தநாளையும். என் பிறந்தநாளே எவரேனும் சொல்லி நினைவுக்கு வரவேண்டும். பிறந்தநாளைக் கொண்டாடுவதும் வழக்கமில்லை. காலையில் எழுந்து முழுப்பகலும் வெண்முரசின் ஒரே ஒரு அத்தியாயம் எழுதினேன். 11 மணிநேரம். எழுதிமுடித்து அந்தியில் ஷேவ் செய்து குளித்தேன். வாழ்த்துக்கள் வந்துகொண்டிருந்தன.

மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள். அனைவருக்கும் நன்றி அ.முத்துலிங்கம் அவர்களின் வாழ்த்து எப்போதுமே ஓர் ஆசி. பாரதிமணி, கல்யாண்ஜி, பா.ராகவன், தேவதேவன் என எழுத்தாளர்களின் வாழ்த்துக்கள். கொண்டாடவில்லை என்றாலும் வாழ்த்துக்கள் கொண்டாட்டம்தான்.

ஆனால் சைதன்யா 26 தான் டெல்லியில் இருந்து வருகிறாள். ஆகவே நாங்கள் பிறந்தநாளை நான்குநாட்களுக்கு ஒத்திப்போட்டிருக்கிறோம். அருண்மொழியின் திட்டம். 55 வயதிலேயே மேலும் நான்குநாட்கள் வாழ்வதற்கு வாய்ப்பு என்பதனால் நானும் அதை ஆதரித்தேன்

பிறந்தநாள்2017

பிறந்தநாள்2016

பிறந்தநாள்2011

பிறந்தநாள் 2009

பிறந்தநாள் 2008

பிறந்தநாள் -கடிதங்கள்

பிறந்தநாள் கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30
அடுத்த கட்டுரைடு லெட்